Category Memories

கம்பளிப்பூச்சி

மண்ணுக்கு நச்சு உரம் போட்டுஎம் நெஞ்சில் அடித்தீர். புல்லுக்கு மருந்திட்டுஎங்கள் வயித்தில் அடித்தீர். உம் பிள்ளைகள் பிடித்து விளையாடவர்ணம் காட்ட நாங்கள் இல்லை இனிஉங்கள் சந்ததிகளுக்கு எங்களை காட்டுங்கள் பாடப்புத்தகத்தில் பதிவு செய்யுங்கள் எங்களையும்நாங்களும் உங்களுடன் வாழ்ந்தோம்கைகளில் தவண்டோம்என்று நீங்கள் வரலாறு எழுத.

கரும்பலகையும் , வெள்ளை சோக்கும்

சந்தித்து நாம் வெகுநாள் தொலை தூரம் சென்றுவிட்டோம் இனி சந்திக்க வாய்ப்பில்லை காலத்தின் வேகத்தில் காணாமல் போனோம் நாங்கள்; சேர்ந்திருந்த காலம் பொன்நிலவு பூத்தகாலம் இனியும் நாங்கள்; சேரலாம் காலம் பின்னோக்கி போகவேண்டும்; இனியும் நாங்கள்; வாழலாம் தொழில் நூட்பம் தொலையவேண்டும் கரும்பலகையே, என்னால் நீ வெள்ளையானாய் உன்னால் நான் குள்ளமானேன். நாம் இருவரும் ஒன்றாகி…

Hartley College A.G.M.

ஹாட்லிக்கல்லூரியின் பழையமாணவர்களின் Executive Annual Meeting வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். கிட்டதட்ட பெரும்பாலும் 90ம் ஆண்டிற்கு முன் ஹாட்டிலியில் கல்வி கற்றோரே அதில் கலந்துகொண்டிருந்தனர். அவரவர் செய்யும் தொழிலில் பாண்டித்தியம் பெற்றவர்கள். பல்வேறு தொழில் துறைகளில் உள்ளவர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். சிலருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தது…

திரு. ராஐரட்ணம் சேர் அவர்கள் எமது கமராவின் கண்ணிற்கும் Mic இன் செவிக்கும் சிக்கியபோது.

என்னிடம் ஒரு Teachers பட்டியல் இருக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பவர் திரு.ராஐரட்ணம் சேர் அவர்கள் ஆவணப்படுத்துவதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவோ, அவரின் பெருமை சொல்லவோ எனக்கு வயசும் காணாது. அவரிடம் நான் ஒருவருடம் கல்விகற்றேன். சில இக்கட்டான சூழ்நிலையில் என்னை இலகுவாக தன்திறமையால் என்னை தூக்கிவிட்டார். நானும் அவரின் மாணவன் என்பதில் எனக்குபெருமை. தலைமுறைகள்; தாண்டி…

Jet Plane னும் மண்ணெண்ணெயும்

காலை நேரம் மணி 6:45. அது எனது உடற்பயிற்சி நேரம். கொழும்பு காக்கைதீவு கடற்கரைப்பூங்காவில் இருக்கிறேன். சிறிது இளைப்பாற அங்கு கடலை பார்த்தபடி இருக்கும் ஒரு பழைய மரத்திலான ‘பெஞ்ச்’ இல் அமர்கிறேன், அப்ப தலைக்கு மேல் ஏதோ இரையும் சத்தம் கேட்கிறது. வானத்தை அண்ணாந்து பார்க்கிறேன். அங்கு ஒரு Jet Plane புகை விட்டபடி…

துவிச்சக்கர வண்டி

இடப்பெயர்வின் போது எங்களுடன் நீயும் சேர்ந்துஉன் இடுப்பெலும்பைமுறித்துகொண்டாய். நாம் ஒளித்து தவறணையில் கள்ளடிக்கநீ படலையில் சாய்ந்து கண்ணடித்தாய் உன்னில் ‘Dynamo’ கட்டி நாம் தேய்க்கஎங்களை ‘ BBC’ கேட்கவைத்தாய் கால் வலிக்கஉன்னைசுத்திஇளையராஐவை வீட்டுக்கு கூப்பிட்டோம். நீ கழுதையாகி விறகு சுமந்துவீட்டில் அடுப்பு எரிய வைத்தாய். செல்லுக்கும் பொம்பருக்கும் தப்பதெருவோரமாக சேர்ந்து படுத்தாய் நீ. தூரப்பயணம் உன்னுடன்…