V.Nishanthan

V.Nishanthan

வண்டுக்கு வந்தது கோவம்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் வீட்டில் ஒய்வாக நிற்கும் நாள். (15.05.2022 காலப்பகுதி) குளித்துவிட்டு தலை துவட்டிய ஈரமான துவாவையை உடுப்பு காயபோடும் வெளிமுற்றத்தில் இருக்கும் கொடியில் போடும் போது கண்ணில் பட்டார் இவர். சாதாரண வண்டுதானே என்று நினைத்து நகர்ந்து போகமுடியவில்லை… பக்க வாட்டில் பார்த்தேன் அதன் தலையில் மாடுகளுக்கு இருப்பது போல் கொம்பு…

திரு. ராஐரட்ணம் சேர் அவர்கள் எமது கமராவின் கண்ணிற்கும் Mic இன் செவிக்கும் சிக்கியபோது.

என்னிடம் ஒரு Teachers பட்டியல் இருக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பவர் திரு.ராஐரட்ணம் சேர் அவர்கள் ஆவணப்படுத்துவதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவோ, அவரின் பெருமை சொல்லவோ எனக்கு வயசும் காணாது. அவரிடம் நான் ஒருவருடம் கல்விகற்றேன். சில இக்கட்டான சூழ்நிலையில் என்னை இலகுவாக தன்திறமையால் என்னை தூக்கிவிட்டார். நானும் அவரின் மாணவன் என்பதில் எனக்குபெருமை. தலைமுறைகள்; தாண்டி…

Jet Plane னும் மண்ணெண்ணெயும்

காலை நேரம் மணி 6:45. அது எனது உடற்பயிற்சி நேரம். கொழும்பு காக்கைதீவு கடற்கரைப்பூங்காவில் இருக்கிறேன். சிறிது இளைப்பாற அங்கு கடலை பார்த்தபடி இருக்கும் ஒரு பழைய மரத்திலான ‘பெஞ்ச்’ இல் அமர்கிறேன், அப்ப தலைக்கு மேல் ஏதோ இரையும் சத்தம் கேட்கிறது. வானத்தை அண்ணாந்து பார்க்கிறேன். அங்கு ஒரு Jet Plane புகை விட்டபடி…

துவிச்சக்கர வண்டி

இடப்பெயர்வின் போது எங்களுடன் நீயும் சேர்ந்துஉன் இடுப்பெலும்பைமுறித்துகொண்டாய். நாம் ஒளித்து தவறணையில் கள்ளடிக்கநீ படலையில் சாய்ந்து கண்ணடித்தாய் உன்னில் ‘Dynamo’ கட்டி நாம் தேய்க்கஎங்களை ‘ BBC’ கேட்கவைத்தாய் கால் வலிக்கஉன்னைசுத்திஇளையராஐவை வீட்டுக்கு கூப்பிட்டோம். நீ கழுதையாகி விறகு சுமந்துவீட்டில் அடுப்பு எரிய வைத்தாய். செல்லுக்கும் பொம்பருக்கும் தப்பதெருவோரமாக சேர்ந்து படுத்தாய் நீ. தூரப்பயணம் உன்னுடன்…