V.Nishanthan

V.Nishanthan

கள்ளு தவறணையும், என்ர Canon Camera உம்….

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்வு இது. அது. ஒரு சனிக்கிழமை மதியம் சரியான 11மணி. வெயில் தன்வேலையை கச்சிதமாக காட்டியது. நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம். புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கோயில் கட்டுமானங்களை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து அதன்மூலம் வெளிநாட்டு உதவியை பெறுவது சம்பந்தமான வீடியோ தொகுப்பு செய்வதற்காக. அது ஒரு சிறிய வேலைதிட்டம்… அதனால்…

சயிக்கிள் ஓட பழகிய நாட்கள்

நாகர்கோயில் முருகையா கோயில் விளம்பர வேலைத்திட்டத்திற்காக சென்றிருந்த நேரம். நேரம் சாயங்காலம் நான்கு மணியை நெருங்கி கொண்டு இருந்தது. எமது வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டோம். வாகனத்தின் A/C இனை Off பண்ணி, கண்ணாடிகளை இறக்கி விட்டிருந்தோம். அந்தி நேர சுத்தமான அந்த கிராம காற்று மண்வாசனையுடன் இதமாக உடலை வருடியது. சாயங்கால வெயில் நட்பு…

‘ வட 99 நிகழ்வு ‘ அதன் மூலம் பலரை பார்த்தோம் ஆனால் சிலரை மறந்து விட்டோம். அது தவறு….யார் அவர்கள்?

‘ வட 99 ‘ நிகழ்வானது நண்பர்களை மீண்டும் அருகருகில் அதே பாடசாலை நினைவுகளுடன்…… நாம் துள்ளித்திரிந்த எங்கள் பாடசாலை மைதானத்தில் மாணவ மனதுடன் அமரவைத்தது. நண்பர்களை ‘டேய்’ போட்டு அழைத்து தோழில் கை போட்டு குதூகலிக்கவைத்தது. அரவணைக்க வைத்தது. ஆர்ப்பரிக்கவைத்தது. பாடசாலை நினைவுகளை அதே நண்பர்களுடன் அசை போட வைத்தது. பாட்டு பாடி ஆட்டம்…

இரவிலும் ஒளிரும் பருத்தித்துறை.

ஒரு மாதத்திற்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன் குடும்பமாக ஊரை சுற்றிவருவது வழமை. ஊர் சப்பாடு வயிறு முட்ட சாப்பிட்டு…. ஊர் நட்புகளுடன் மனம்விட்டு பேசுவது ஒரு மன ஆறுதல். நாம் பிறந்த வளர்ந்த வீட்டில் ஓரமாக புல்லுப்பாயில் படுத்து உறங்குவது எனக்கு பிடித்த ஒன்று. எங்கள் வீட்டில் ஒரு கறுப்பு நாய் நிக்குது. ஒரு வெள்ளை…

பளையில் பேய், பனையில் நேருப்பு.

ஒரு சனிக்கிழமை, 8 ம் மாதம், இரவு 7.40 மணி இருக்கும். கிளிநொச்சியில் இருந்து கொடிகாமம் நோக்கிய பயணம். வேலை நெருக்கடிகள் இல்லை. ஆறுதலான, பரபரப்பு இல்லாத ஒரு மோட்டார் சயிக்கிள் பயணம். இயற்கையை ரசித்தபடி. றோட்டின் இரு பக்கமும் மாறி மாறி பார்த்தபடி பயணிக்கிறேன். இயக்கச்சியை கடந்து பளையை அண்மித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது… எனது வலது…

Morris – Oxford Car

ஊருக்கு போயிருந்த நேரம்.. கிளிநொச்சி நோக்கிய பயணம் என் நெருங்கிய நண்பர் ஒருவருடன் காரில். ஊருக்கு சென்றால் அதிகம் வெய்யில் வெக்கை இல்லாத நேரங்களில் கார் கதவு கண்ணாடியை இறக்கி ஊர் காற்றை உள்வாங்கியபடி இளையராஜா வின் இசையுடன் பயணிப்பது எனக்குபிடிக்கும். ஊர்க்காற்று உடலில் உரச எமது ஊரின் தனி அழகை ரசித்தபடி இருக்க எமது…

ஓய்வாக ஒருவர்

தலை நகரின் காலை நேர பரபரப்புகளின் மத்தியில் வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்கு சிவப்பாக மாற மோட்டர் வாகனங்களின் வேகம் மெதுவாக ஓய என்முன் ஓரு வாகனம் ஓய்வடைந்தது அதிலும். வாகன ஓட்டுனர் உள்ளார் நடு ரோட்டில் பச்சை விளக்குக்காக காத்திருக்கிறார் அவரும் அவர் வாகனத்தில் ஓய்வாக அமர்ந்து இருக்கிறார் எழுத்து – வி.நிஷாந்தன் www.vnishanthan.com

எனக்கு ஒரு Doubt அது….

எங்கட ஊரில ஒரு வீட்டில ஒரு கறுத்த கொழுத்த பூனை வெள்ளையும் கறுப்பும் கலந்து ஒரு சாம்பல் நிறத்தில் இரண்டு குட்டிகளும் ஒரு தனி கறுத்த குட்டியும் போட்டிருந்தது சாமி அறையில் இருக்கும் தேக்கு மர கட்டிலுக்கு பின்னுக்கு குட்டிகள் பிறந்து பதினைந்து நாட்கள் ஆகுது. அந்த பூனைக்கு இரண்டு நாளாக கொஞ்ச சாப்பாடும் கிடைக்கவில்லை,…

தயவுசெய்து பணம் செலுத்தவேண்டாம்.

A9 றோட்டில் கரந்தாய் என்று ஒரு இடம்அது பளையையும் இயக்கச்சியையயும் இணைக்கிறது.அங்கு கரந்தாய் குளம் என்ற ஒரு இயற்கை அழுகு கொஞ்சும் குளமும் அங்கு உள்ளது.அதற்கு எதிர்பக்கம் ஒரு இடம் உள்ளது. அங்கு மதியம் இலவசமாக சாப்பாடு வழங்குகிறார்கள். யாரும் போய் வயிராற சாப்பிடலாம்.சிவத்த அரிசி சோறு, பருப்பு பால் கறி, ஒரு அருமையான சாம்பார்.வெள்ளி…