Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ஒரு மாதத்திற்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன் குடும்பமாக
ஊரை சுற்றிவருவது வழமை.
ஊர் சப்பாடு வயிறு முட்ட சாப்பிட்டு….
ஊர் நட்புகளுடன் மனம்விட்டு பேசுவது ஒரு மன ஆறுதல்.
நாம் பிறந்த வளர்ந்த வீட்டில் ஓரமாக புல்லுப்பாயில் படுத்து உறங்குவது எனக்கு பிடித்த ஒன்று.
எங்கள் வீட்டில் ஒரு கறுப்பு நாய் நிக்குது. ஒரு வெள்ளை புள்ளி கூட அதுக்கு இல்லை
.அதுக்கும் எனக்கும் அடிக்கடி நட்பு ரீதியாக அன்புகாரணமாக சண்டை வரும். சரியான குறும்புகாரி. வயது இரண்டு.
நான் விடிய கண்விழிக்கும் வரை பக்கத்தில் பொறுமையாக பார்;த்துக்கொண்டு இருந்துவிட்டு கண்விழித்த அடுத்த கணம் எனது முகத்தில் நக்கிவிட்டு பாய்ந்து ஓடுவது அதன் குறும்புகளில் ஒன்று.
எனது கார் வந்தால் நான் காரில் உள்ளே இருக்கிறனோ என்று அறிய தனது முன்காலை மடக்கி தனது இரண்டு பின்காலிலும்; எழும்பி நின்று கார் கண்ணாடி ஊடாக பார்ப்பது ஒரு அழகு.
எங்கள் சின்ன மகளுடன் பக்குவாக கறுப்பி இவள் விளையாடும் பக்குவத்தை பார்த்து மகளை தூக்கி கொஞ்சதோ அல்லது ‘கறுப்பி’ இவளை தூக்தி கொஞ்சுவதோ என்று நான் கலங்கி நின்றது உண்டு.
எங்கள் சின்ன மகளுடன் முன்னிரவில் ஊரை சுற்றி பார்க்க கிளம்பினேன்.
இதற்கு முன்னர் ஊருக்கு சென்ற போது பருத்தித்துறை பிரதான வீதி மற்றும் அதனோடு இணையும் தெருக்களில் காணப்படும் தெரு மின் விளக்குகளில் பல ஒளிர்வது இல்லை.
தெருக்கள் இருளில் முழ்கி இருந்தன.
அதை பார்த்துவிட்டு நான் கடந்து சென்றிருக்கிறேன்.
என்னால் மாற்ற முடியாத விடயங்களை பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்வது இல்லை.
ஆனால் இந்தமுறை நான் ஊர் சென்றபோது தெரு மின் விளக்குகள் நேர்த்தியாக எரிவதை கண்டேன்.
எரியும் விளக்குகளில் அமைப்புகளில் ஒரு நேர்த்தியை காணக்கூடியதாக இருந்தது.
நான் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாக ‘ விளக்கு ‘ பிடிப்பதும் இல்லை.
எந்த அரசியல் கட்சியையும் விலத்தி எழுதுவதும் இல்லை.
நல்ல சிந்தனைகளுடன் கூடிய சிறந்த செயல்களை நாம் பாராட்டவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஊக்கப்படுத்துவது எமது பொறுப்பு
அதை அக்கறையுடன் செய்யும்போது அதனை பலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
எமது ஊர் இரவில் மின்னொளியில் மிளிர்வதை பார்ப்பது எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது.
அதனால் நான் அங்கு நின்றபோது நான் கண்ட காட்சிகளை இரவு கிட்டத்தட்ட எட்டு மணிபோல் எனது கைத்தொலைபேசி கமராவால் காட்சிகளை பதிவு செய்தேன்.
அதனை உங்களுடன் பகிர்கிறேன்.
உங்கள் கருத்துக்களை இது சம்பந்தமாக இங்கு பதிவிடுங்கள்.
– எழுத்து –
வி.நிஷாந்தன்