Jet Plane னும் மண்ணெண்ணெயும்

காலை நேரம் மணி 6:45. அது எனது உடற்பயிற்சி நேரம். கொழும்பு காக்கைதீவு கடற்கரைப்பூங்காவில் இருக்கிறேன்.

சிறிது இளைப்பாற அங்கு கடலை பார்த்தபடி இருக்கும் ஒரு பழைய மரத்திலான ‘பெஞ்ச்’ இல் அமர்கிறேன், அப்ப தலைக்கு மேல் ஏதோ இரையும் சத்தம் கேட்கிறது. வானத்தை அண்ணாந்து பார்க்கிறேன்.

அங்கு ஒரு Jet Plane புகை விட்டபடி என் தலைக்கு மேல் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மிக வேகமாக நகர்கிறது

அது வெளிவிடும் புகை சிறிய கோடாக வெளிவந்து பெரிதாக விரிகிறது. ஆரம்பத்தில் இருந்து அடிவரை அகலமாகி அடர்த்தி குறைந்து செல்கிறது.


வானத்தை ஒரு வெள்ளை பஞ்சால் கோடு போட்டு பிளந்தது போல் இருக்கிறது
என் நினைவுகள் பின்னுக்கு செல்கின்றன.


1994ம் ஆண்டு காலப்பகுதி, எனக்கு வயது 14 இருக்கும்


அது பசுமையான காலம்….


LapTop இல்லை மோட்டார் சயிக்கிள் எம்மிடம் இல்லை, Mobile ம் இல்லை, wi – fi ம் இல்லை, அந்த கொடூரமான யுத்தகாலத்தில் கூட நட்பின் அரவணைப்பும் சொந்தங்களின் பாசமும் அதிகமாக இருந்தது எந்தவித பரபரப்பும் இல்லாமலே துவிச்சக்கரவண்டியிலேயே பயணத்திலேயே நட்பை வளர்த்தோம்.

யாழ்ப்பாணத்தில் பெற்றோல் வாசமே எங்களுக்கு மறந்து போன காலம் அது.


ஒரு சிங்கர் சூப்பி போத்தல் (100 அட) பெற்றோலின் விலை ரூ.300வாக இருந்தகாலம் கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன்னர் ஒரு போத்தல் பெற்றோல் ஏறத்தாள ரூ. 3000 இருக்கும் (எனக்கு நினைவு தெரிந்தவரை)


அனால் எங்கட அண்ணைமார் பெற்றோலில்; Honda RoaMaster 200 இலும்,
Pajiro Jeep விலும் பறந்த காலம் எங்களுக்காக


அவர்களை நாங்கள் மரியாதையோடும் பிரமிப்போடும் பார்த்தோம்
இந்திய தயாரிப்பு மோட்டார் சயிக்கிள்கள் வராத நேரம்.


எல்லாம் ஐப்பானிய தயாரிப்பு மோட்டார் சயிக்கிள்தான் அப்போது பெரும்பாலும்
அதுகளை ஐப்பான்காரன் தயாரித்தது பெற்றோலில் இயங்குவதற்கு….


ஆனால் நாங்கள் இயக்கியது அதுகளை மண்ணெண்ணெயில் வெற்றிகரமாக
அதற்காக நாங்கள் சில மாற்றங்களை யோசித்து செய்து செயற்படுத்தினோம்

  1. எஞ்சினுக்கு தேவையான அளவு பெற்றோலை அனுப்பும் Carborator க்கு தனித்தனியாக இரண்டு சேலைன் பைப்களை (saline pipe ) வெட்டி செருகினோம்
  • ஒன்று –
    வெளிக்காற்றை நாங்கள் விரும்பும் போது பலவந்தமாக எமது வாயால் ஊதி
    மண்ணெண்ணெயில் இயங்கும் எஞ்சினுக்கு போதிய காற்றினை வழங்க…..
  • மற்றது –
    எஞ்சினை start பண்ண மட்டும் மிக சிறிய அளவு பெற்றோலை நேரடியாக
    செலுத்தி அதன்பின் மண்ணெண்ணெயில் இயங்க வைக்க….
  • சிறிய அளவில் பெற்றோல் வைத்திருப்பதற்காக (100 ml singer plastic bottle) இது எப்போதும் மோட்;டார் சயிக்கிளில் இருக்கும்.
  • பெற்றோல் எஞ்சின் மண்ணெண்ணெயில் இயங்குவதால் அடிக்கடி ‘பிளக்’
    (spart plug) அடித்துப்போகும் அப்போது அதனை கழட்டி
    வெளியில் எடுத்து நெருப்பில் சுட்டு பண்ணி திருப்பி போட வேண்டும்.

அதனால்

தயாராக எப்போதும் ஒரு நெருப்பெட்டி, பழைய துணித்துண்டு, ஒரு உடைந்த வால்பிளேட், கிளச் கேபிளை வெட்டி செய்த இரும்பு பிறஷ் அத்தனையும் எப்போதும் தயாராக வைத்திருப்பம்.

மண்ணெண்ணெய் மோட்டார் சயிக்கிளில் இருந்துவரும் வெண்ணிற புகை மிக அதிகம்
அதுவும் சில மோட்டார் சயிக்கிள்கள் அதன் வெண்ணிற புகைக்குள்ளேயே மறைந்து விடும் பயணிக்கும்போது

மண்ணெண்ணெய் மோட்டார் சயிக்கிளில் பயணம் செய்யும் போது…
எஞ்சினின்; செயல் திறன் அடிக்கடி குறையும்
அதன்போது


மோட்டார் சயிக்கிளில் இருக்கும் choke ஐ இழுப்போம் அதன்போது அளவுக்கு அதிகமாக வெள்ளை புகை அடர்த்தியாக வெளிவரும்


அந்த choke இழுக்கும் Technic ஐ நாங்கள் சடுதியாக வேகத்தை அதிகரிக்க பயன்படுத்துவோம். அதன்போதும் பாரிய அளவில் புகைவெளியேறி தள்ளும்
மண்ணெண்ணெய் புகையும்,


மண்ணெண்ணையும்,
Jam போத்தல் மண்ணெண்ணை விளக்கும்
எங்கள் படிப்பு மற்றும் பயணங்களுடன் இணைந்து வாழ்வியலுடன் கலந்து இருந்த இனிய காலம் அது


அதன்போது


பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் விளையாட்டுப்போட்டி நடந்துகொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டுந்தோம்.


மற்றைய மாணவர்கள் நீளம் பாய்தல், உயரம் பாய்தல், ஓட்டம் குண்டெறிதல் என பயிற்சிசெய்து கொண்டு இருந்தார்கள்.


எங்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்கள் உயர்கல்வி (A/L) கற்கும் அண்ணன்மார்கள்.


அப்போது வானத்தில் ஒரு இரையும் சத்தம்……


நிமிர்ந்து பார்த்தேன்


மிக உயரத்தில் ஒரு Jet Plane அடர்த்தியான மிக நீளமான வெள்ளை புகையுடன் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. வானத்தை வெள்ளை கோடால் கிளித்தபடி


‘அண்ணே, ஏன் இந்த வெள்ளை புகை’ பக்கத்தில் தொப்பியணிந்து கொண்டு சுவர்பக்கம் பார்த்துக்கொண்டு நின்ற அண்ணாவிடம் அவரை நிமிர்ந்து பார்த்து கேட்டேன் அப்பாவியாக ஒன்றை அறியும் ஆவலுடன்.


அவர் நிமிர்ந்து வானத்தை பார்த்துவிட்டு சொன்னார்


‘ஏதோ எஞ்சினில அடைப்பு போல Choke இல போறன் போல இருக்கு அதுதான் புகை கக்குது’ எண்டார் வெகுசாதாரணமாக


இப்ப கூட அவர் சொன்னதை நினைச்சாலும் தனியாக இருந்தா கூட சத்தமாய் சிரித்துவிடுறன்.


எவ்வளவு நகைச்சுவையான பேச்சு. யதார்த்தமாக………


எழுத்து
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *