ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் பிரதான பஸ் நிலையங்களில் பேரூந்துகள் நிரம்பி வழிந்து புறப்படுகின்றன.
மக்கள் சத்தமாகவே கதைத்கிறார்கள் ஒருவேளை இங்கு வாய் நீளமா அல்லது காது கட்டையோ புரியவில்லை.
தனியார் நிறுவனங்களிலும், தனிப்பட்ட சந்திப்புகளிலும் தனி மனித மரியாதை பொங்கிவழியுது. பேரூந்துகளிலும் பொது இடங்களிலும் அது நொண்டுகிறது.
தெருவரை நீண்டு முகம் காட்டும் சாப்பாட்டு கடைகளில் உணவுகளின் சுவையோ Five Star Hotel களை மிஞ்சுகிறது.
நாலு சக்கர தள்ளுவண்டிலில் வகை வகையான தோசையும் சுவையான சட்னியும், பஞ்சுபொல் இருக்கும் இட்லியும் சாம்பரும் ரெடியாகுது சுவை நாக்கை தூக்குது. வயிறு நிரம்பி ஏப்பம் வரும் வரை நகர மனம் மறுக்குது.
தெருவோர பழக்கடைகள் நடு இரவு வரை திறந்திருக்கிறது. கூட்டமும் இருந்து கொண்டுதான் இருக்குது.
வாகனத்தில் இருக்கும் Horn ஐ அடித்துக்கொண்டு ஓட்டுகிறார்களா இல்லை ஓட்டிக்கொண்டு அடிக்கிறார்களா தெரியவில்லை. Horn சத்தம் காதை பிளக்குது.
வாகனங்களும் மற்றும் தெருவோர சுவர்களும்; விளம்பரங்களால் நிரம்புது. தனி நபர் விளம்பரங்கள் அது தனி ரகம்
வாகனத்தின் முகப்பு கண்ணாடியைவிட வாகனத்தின் பெயர் பலகை அதற்கு மேல் பெரிதாக இருக்கு.
வாகனம் ஓட்டும் போது பாதைக்கு குறுக்க வந்தாலோ, அல்லது பிழையாக பக்கம் மாறி பயணித்தாலோ யாரும் முறைப்பதும் இல்லை அதை பெரிதாக அலட்டிக்கொள்வதாதவும் இல்லை.
மிகுதி பணம் ஒரு ரூபாய்க்கான சண்டை பேருந்துகளிலும், பலசரக்கு கடைகளில் (அங்கு மளிகை கடை) இந்தியா, பாகிஸ்தான் சண்டையையும் மிஞ்சுகிறது.
பரபரப்பு குறையாமல் சலிக்காமல் உட்காராமல் நின்றுகொண்டே உடுப்பு கடைகளில் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஓயாமல் வேலைசெய்கிறார்கள்.
சில முக்கிய பேருந்து நிலையங்களில் சிறுநீர் வாடை தான் முதலில் வரவேற்கிறது.
எங்கும் மஞ்சள் நிற ஓட்டோக்கள். மக்களை ஏற்றி செல்லும் எல்லா சாரதிகளும் காக்கி Uniform
பொலிசார் கூட கெல்மெட் அணிவதில்லை மோட்டார் சயிக்கிள் ஓடும்போது. (‘காக்க காக்க’ சூர்யாட்ட சொல்லவேணும்)
பஸ் கண்டக்டர்கள் கறாராகவும் முறைப்பாகவும் இருக்குpறார்கள். கனிவு என்பது சுத்தமாக இல்லை (எனக்கு எங்கட கொண்டக்டர் அந்தோனி அண்ணைதான் ஞாபகத்தில் வந்தார்)
இளநீர் கூட Door Delivery இல் கிடைக்கிறது.
பேரம் பேசும் திறமை எல்லாருக்கும் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. பெண்களிடம் அது பொங்கி வழிகிறது. ஐம்பது ரூபாய்க்காக அரைமணிநேரம் பேரம் பேசுகிறார்கள்.
கிட்டதட்ட எல்லோரும் அரசியல் ஆலோசர்களாக இருக்கிறார்கள். அரசியல் பேசியே உயிரெடு;க்கிறார்கள்.
சரவணாஸ் கடைக்கு சாமான் வாங்க போனேன் அங்கு சிறுநீர் கழிக்க Bathroom சென்றேன். அதற்கும் பெரும் கூட்டம் Line இல் நின்றது….. திரும்பி ஒடியே வந்துட்டன்.
சொர்க்கமே என்றாலும் நம் ஊரு போலவருமா….. பாட்டுத்தான் ஞாபகம் வருது.