வண்டுக்கு வந்தது கோவம்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் வீட்டில் ஒய்வாக நிற்கும் நாள்.

(15.05.2022 காலப்பகுதி)

குளித்துவிட்டு தலை துவட்டிய ஈரமான துவாவையை உடுப்பு காயபோடும் வெளிமுற்றத்தில் இருக்கும் கொடியில் போடும் போது கண்ணில் பட்டார் இவர்.

சாதாரண வண்டுதானே என்று நினைத்து நகர்ந்து போகமுடியவில்லை… பக்க வாட்டில் பார்த்தேன் அதன் தலையில் மாடுகளுக்கு இருப்பது போல் கொம்பு இருப்பதை அவதானித்தேன்.

உடுப்பு காயப்போடும் கால் இஞ்சி நைலோன் கயிற்றின் மேல் அமர்ந்திருந்தார்.

அதன் உருவத்திற்கு ஏற்றவாறு அதுவும் அதன் தலையின் பருமனுக்கு ஒத்ததாக மொத்தமாக இருக்குது.

மெதுவாக சத்தமில்லாமல் நகர்ந்து அதன் மேல் பக்கத்தை எட்டி பார்த்தன்… அதன் தலையில் ஒரு கொம்பு அல்ல இருண்டு கறுத்த கொம்புகள் அந்த கொம்புகள் கிட்டதட்ட திமில் கொண்டு முறுக்கேறிய காளையின் கொம்புகள் போல் இருந்தது கரும் கறுத்த நிறத்தில்.

என்ன அட்டகாசமான படைப்பு…. என்ன நேர்த்தியான உருவமைப்பு.

சிறிதோ பெரிதோ ஒரே அளவு கவனம் எடுத்து பக்காவாக
படைக்கபட்டிருக்கிறது.

இயற்கையின் படைப்பு திறன் முன்னே நாம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது புரியுது.

இதை எல்லாம் சிந்தித்தபடி

என் கமராவுடன் நான் தயாராக இவர் இங்கிருக்கமாட்டார். இவர் பறந்து விடுவார் எனக்கு தெரிந்தது.

Camera Lens ஐ க ழட்டி மாட்டுவதற்குள் இவர் நிச்சயம் பறந்துவிடுவார்.

எட்டி எனது கைத்தொலைபேசியை எடுத்தன் சத்தமின்றி (iphone – 7) அதன் Auto focus function என் அவசரத்திற்கு வேலை செய்ய மறுக்க

அதுவும் வண்டை சரியாக focus பண்ண முரண்டு பிடித்து… ஒருவாறு ஒத்துழைக்க தொடங்க

வண்டுக்கு வந்துவிட்டது மூக்கில் கோபம்

தன்னை கேட்காமல் போட்டோ எடுத்ததற்கு என்னை பார்த்து முறைத்துவிட்டு ‘சர்’ என பறந்தார்வண்டு அடிப்படை உரிமை மீறல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதற்கு.

நன்றி.

எழுத்து
வி.நிசாந்தன்
www.vnishanthan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *