தயவுசெய்து பணம் செலுத்தவேண்டாம்.

A9 றோட்டில் கரந்தாய் என்று ஒரு இடம்
அது பளையையும் இயக்கச்சியையயும் இணைக்கிறது.
அங்கு கரந்தாய் குளம் என்ற ஒரு இயற்கை அழுகு கொஞ்சும் குளமும் அங்கு உள்ளது.
அதற்கு எதிர்பக்கம் ஒரு இடம் உள்ளது. அங்கு மதியம் இலவசமாக சாப்பாடு வழங்குகிறார்கள்.


யாரும் போய் வயிராற சாப்பிடலாம்.
சிவத்த அரிசி சோறு, பருப்பு பால் கறி, ஒரு அருமையான சாம்பார்.
வெள்ளி கிழமை ஸ்பெசல். அப்பளம் வடை என அயிட்டம் நீளும்.
ஞாயிற்றுக்கிழமை பூட்டு.


இதனை நான் கேள்விப்பட்டு இருந்தேன்.
போககூடிய நேரமும் வந்தது, போனேன்.
சமையல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.
அங்கு வருகை தருபவர்கள் அங்கு தாங்களே உணவை தங்களுக்கு ஏற்ற அளவில் எடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.


அதற்கு உரிய அத்தனை அடிப்படை வசதிகளும் நேர்த்தியாக செய்யப்பட்டு உள்ளது. அமர்ந்து உண்ண வசதிகள் அழகாக செய்யப்பட்டு உள்ளது.
ஆடம்பரம் இல்லை, ஆனால் நேர்த்தியாக சுத்தமாக உள்ளது.
உள்ளே சென்று சுற்றிவர பார்த்தேன். இறுக்கமான ‘கமரா’ கண்காணிப்பில் அந்த இடம் இருந்தது.


நான் இதனை இன்னொருவர் சொல்லித்தான் அறிந்து இருந்தேன்.
நானும் என்னோடு இன்னுமொரு நண்பரும வந்து இருந்தார்
அவருக்கு இந்த இடத்தை பற்றி நான் ஏதுவும் சொல்லாமல் தான் அவரை கூட்டிக்கொண்டு போய் இருந்தேன்.
நாங்கள் போகும் போது அங்கு ஏற்கனவே மூன்று பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் எங்களை சிறு புன்னகையுடன் வரவேற்றார்கள்.


ஒருவர் மட்டும் சற்று தள்ளி அமர்ந்து தனிய சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.
நாங்களும் சாப்பாட்டை தட்டில் போட்டுக்கொண்டு சாப்பிடும் இடத்திற்கு வந்தோம்.
அதன்போது ஒன்றாக இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த இருவரும் சேர்ந்து எங்களுக்கு சற்று முன்புதான் அங்கு வந்து இருந்தது எனக்கு புரிந்தது.
அதில் ஒருவர் முதல் முறையாக வந்து இருக்கிறார் என்பதும் மற்றவர் இந்த சேவையினைப்பற்றி அவருக்கு விளக்கி கொண்டு இருந்தார்.


அப்போது நாங்கள் சாப்பிட தொடங்கி இருந்தோம்.அதன்போது இன்று முதல் தடவையாக வந்தவர் சொன்னார்.
‘நான் அடுத்த முறை வரும்போது தனது வீட்டில் இருந்து தான் உற்பத்தி செய்யும் மரக்கறி கொண்டு வந்து இலவசமாக கொடுக்கபோவதாக சொன்னார். அவரிடம நான் கதைக்க தொடங்கினேன்.
கதைத்துக்கொண்டிருக்கும் போது தனியாக இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் குறுக்கிட்டு சொன்னார்.


‘எல்லாம் நல்லம், இங்கு கமரா இருப்பது பிழை எனவும் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை வீடியோ எடுப்பது சரியில்லை’ என்றார்.


அதற்கு நான் சொன்னேன்….


‘இங்கு இந்த சாப்பாட்டிலோ அல்லது சமைக்கும் இடத்திலோ ஏதாவது பிழை ஏற்பட்டு யாராவது ஒருவருக்கு இங்கு சாப்பிட்டு உடல் ரீதியாக பிரச்சனை வந்தால், அதற்குரிய அத்தனை பின் விளைவுகளுக்கும் இந்த நிர்வாகமே பொறுப்பு அதனால் அவர்கள் அதனை கண்காணிக்க என்ன முன்நடவடிக்கை எடுத்தாலும் பிழை இல்லை’


மேலும் ‘ இங்கு சாப்பாடு தரும் இவர்கள் யாரையும் வலுக்கட்டாய இழுத்து கட்டாயமாக சாப்டுங்கோ என்று சொல்லவில்லை, என்னிடமும் உங்களிடம் வெளியில் உள்ள ஒரு சாப்பாட்டு கடையில் எமக்கு விரும்பியபடி சாப்பிட காசு உள்ளது, நாம் ஏதோ ஒரு தேவைக்காக இங்கு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்றேன்.


அவர் திருப்பி ஏதும் சொல்லவில்லை. சாப்பிட்டுக் கொண்டு இருந்த மற்றவர்கள் நான் சொன்னதுக்கு சாதுவாக தலையாட்டினார்கள்.
ஆனால் அவர் வேகமாக சாப்பிட்டுவிட்டு வழமைக்கு மாறான வகையில் இல்லாமல் கையை கழுவினார் வேகமாக சற்று இறுக்கமாக


மற்றவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. எனக்கும் தான் சிரிப்பு… ஆனாலும் கொடுப்புக்குள்சிரிப்பை அடக்கிகொண்டு நண்பருடன் வந்து காரில் ஏறி கதவை சாத்திவிட்டு வாய்விட்டு சிரித்தோம்…..


சிரித்துக்கொண்டு நிமிர அவர் எங்கள் காரை குறுக்காக கடந்து விலையுயர்ந்த நவீன மோட்டர் சயிக்கிளில் எம்மை பார்த்து முறைத்துக்கொண்டு கடந்து சென்றார்.
எனக்கு இப்ப சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. நண்பரும் நானும் மீண்டும் வாய்விட்டு சிரித்துவிட்டு நகர்ந்தோம்.


‘ மற்றவர்களை திருத்த முயற்சி எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை முயல்வதும் இல்லை தனிப்பட்ட ரீதியில்’ எமது வட்டத்தில் சரியாக வாழ்வோம்.

குறிப்பு – இவ்வகையான எமது ஊர் பதிவுகளை மகிழ்வோடு பகிர உள்ளேன் எனது யை செய்து உங்களால் ஆதரவு தரமுடியுமா. எனக்கு 1000 தேவை 373 இல் நிக்கிறன். எனது இல் 3000 மேற்பட்ட என்னை தெரிந்தவர்கள் உள்ளார்கள் ஆதரவு தாருங்கள்.
ஆதரவு தரும் முதல் 50 பேருக்கு குச்சி ஐசும் குருவி றொட்டியும் இல் அனுப்பப்படும்.

எழுத்து
வி.நிஷாந்தன்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *