Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பயணப்படுதல் எனக்கு பிடித்த ஒன்று
அதிலும் சொந்த ஊருக்கு போவது ஒரு மகிழ்வான தரணம்.
புதுவருட கொண்டாட்டத்திற்காக எனது சொந்த ஊர் பருத்தித்துறைக்கு சென்றிருந்தோம்.
எங்களுக்கு இருண்டு வருடங்களுக்கு முன் ஒரு மகள் பிறந்திருந்தாள்.
ஒரு நேர்த்திக்கடன் வைத்திருந்தோம் வெத்திலைகேணி பிள்ளையார் கோயிலில்
இந்த முறை அதை நிறைவு செய்ய நேரம் கூடி வந்திருந்தது.
நானும் மனைவியும் பிள்ளையும் காரில் பயணப்பட்டோம் பொங்கல் பானையுடன் கோயிலில் பொங்குவதற்காக.
எனது நல்ல நண்பர் பாதுகாப்பாக கார் ஓடினார்.
நான் கார் ஓடினால், கார் சற்று வேகம் குறைந்தால் மகள் ‘ட்ரைவர்’ சீட்டுக்கு பாய்வாள். ‘ஸ்ரேறிங்’ பிடித்துவிளையாட.
நண்பர் கார் ஓடின படியால் அவரின் முகம் இவளுக்கு புதிது கார் ‘ஸ்லோ’ வாகும் போது எல்லாம் அவரை பார்த்து முறைத்துக்கோண்டே மகள் வந்தாள்.
அவரின் கைகளுக்கு இடையில் பாய்ந்து ‘ஸ்ரேறிங்’ பிடித்துவிளையாட பயம்.
ஆனால் நான் கார் ஓடியிருந்தால் கதை தலைகீழாக மாறியிருக்கும்.
இப்போது நல்ல படியாக பெரும்பாலன பகுதிகளில் றோட்டு செப்பன் இடப்பட்டு உள்ளது.
அனாலும் இடைகிடையே மட்டும் காரை, சயிக்கிளின் வேகத்திற்கு சமமான வேகத்தில் மெதுவாக செலுத்தவேண்டி இருந்தது அந்த மாதிரியும் சில இடங்களில் பாதையின் அமைப்பு மோசமாக இருந்தது.
சில இடங்களில் மட்டும் றோட்டு காரின் காதை பிடித்து இழுத்து கொஞ்சம் என்னையும் பார்த்துட்டு போவன் என்றது.
அப்போது கார் ஓடிய நண்பர் றோட்டு போடப்பட்ட விதத்தை எனக்கு விளக்கி சயிக்கிளில் ஏறி வீடு வரை திட்டினார்.
அரசியல் எனக்கு தூரம்.
அதனால் நண்பரின் கதையின் போக்கை ‘நைசாக’ மாற்றினேன்.
குரங்குகளை கூட்டமாக சந்தித்தோம். இறங்கி போய் பேசினோம்.
மகளும் தன் மொழியில் அதுகளுடன் கதைத்தாள். பாசை விளங்கிச்சோ என்று அதுகளிடம் கேட்க என்னிடம் பாசை இல்லை.
காட்டு முயல்கள் பார்த்தோம். அதன் குட்டிகளையும் கண்டோம்.
காட்டு கோழிகள் நடு நடுவில் கண்டோம்.
கௌதாரிகளையும் பார்த்தோம்.
கீரிகளும் சுதந்திரமாக திரிவதை கண்டோம்
கொக்குகளையும் நாரைகளையும் தரிசித்தோம்.
றோட்டோரத்திலேயே அணில்கள் அழகாக இளைப்பாறுவதை அவதானித்தோம்.
ரசித்தபடியே வைத்திலைகேணிக்குள் நுளைந்து, தொடர்ந்து நகர்ந்து பிள்ளையார் கோயிலுக்கு வந்தோம்.
வாகன நேருக்கடியில்லை.. கிட்டதட்ட வாகனங்களே இல்லாத பாதை…
யன்னலை திறந்துவிட்டு ஊர்காற்று உரச ஒரு பயணம் அது ரம்மியம்.
வாகன புதருக்குள் ஒவ்வொரு நாளும் புகுந்து வாழும் எங்களுக்கு,
எமக்கு முன் எந்த வித வாகனமே இல்லை முன் பக்கம் வானமே எல்லை
நாம் பயணிக்கும் தெருவின் இடது பக்கம் நீல வானமும்; கடலும் சந்திக்கும் தொடுவானமே எல்லை.
இவை எல்லாத்தையும் ரசித்தபடி வெற்றிலைக்கேணிக்குள் நுழைந்தோம்.
அதன்பின் மெல்ல நகர்ந்து பிள்ளையார் கோயிலை அடைந்தோம்.
அந்த அழகான பரந்த தேசத்தில் ஆட்களின் நடமாட்டம் வழமை மாதிரி குறைவு.
ஏதோ ஒரு புதிய சூழலுக்கு புகுந்த உணர்வு, வாகனங்கள் கிட்டதட்ட இல்லை, இரைச்சல்கள் இல்லை.
ஆனந்தமான அமைதியாக சூழல்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இயற்கை அழகு கடலும் மணலுமாக விரிகிறது.
கடலை உரசிவரும் காற்று எம்மையும் உரசி செல்கிறது. அது ரம்மியம்.
அந்த இடத்தில் ஒரு அழகிய பிள்ளையார் கோயில் றோட்டோரமாக.
ஆனாலும் யார் வந்தாலும் உடனே வந்து விசாரித்து அறிந்து கொள்வார்கள்.
அவர்களின் தீவிர புலன் விசாரணைக்கு என்னால் தாக்குபிடிக்கமுடியாது,
அதனால் மனைவியை பக்கம் கைகாட்டி விட்டு நான் நழுவிவிடுவேன்.
அங்கு நடந்தவற்றை எனது கைத்தொலைபேசியில் வீடியோ பதிவு செய்தேன்.
உங்களுடனும் பகிர விரும்புகிறேன்.
பிடித்திருந்தால் பாருங்கள்.
நன்றி.
– எழுத்து –
வி.நிஷாந்தன்.