Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

‘ வட 99 ‘ நிகழ்வானது நண்பர்களை மீண்டும் அருகருகில் அதே பாடசாலை நினைவுகளுடன்……
நாம் துள்ளித்திரிந்த எங்கள் பாடசாலை மைதானத்தில் மாணவ மனதுடன் அமரவைத்தது.
நண்பர்களை ‘டேய்’ போட்டு அழைத்து தோழில் கை போட்டு குதூகலிக்கவைத்தது.
அரவணைக்க வைத்தது.
ஆர்ப்பரிக்கவைத்தது.
பாடசாலை நினைவுகளை அதே நண்பர்களுடன் அசை போட வைத்தது.
பாட்டு பாடி ஆட்டம் ஆட வைத்தது.
நக்கல் அடிக்க வைத்து நையாண்டி செய்ய வைத்தது.
பழைய நட்பின் வாசத்தை பக்கத்தில் உணர வைத்தது. பகிரவைத்தது.
அதன் பின்…
போட்டி போட்டோம்…விளையாடினோம், தோற்றோம், வென்றோம்.

வயிறு குலுங்க சிரித்தோம், வயிராற சாப்பிட்டோம். வணக்கம் சொன்னோம், விடைபெற்றோம்.
இவ்வளவு விசயத்தையும் எம் மருகில் அழைத்து வருவதற்காக பொறுப்புகளை தோளில் சுமந்து சறுகாமல் சரியாமல் தொலை தூரத்தில் இருந்தாலும் துல்லியமாக திட்டமிட்டு இந்தநிகழ்வை ஒரு விழாவாக மாற்றியது யார்?
இந்த நிகழ்வு நடைபெற்ற விதத்தை பற்றி அறிந்த அத்தனை பேரின் புருவங்களையும் ஆச்சரியத்தில் உயரசெய்த விடாமுயற்சி நாயகர்கள் மற்றும் எங்கள் நாயகிகள் யார்?
அத்துடன் அந்த நிகழ்வால் Vada 99 இல் படித்த ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்த்தவர்கள் யார்?
யார் தான் அவர்கள்???

Heros மற்றும் Heroines கள் திரையில் அல்ல நாம் சாதாரண வாழ்க்கை பயணத்திலும் அவர்களை சந்திக்கலாம்.
இலகுவாக அவர்களுடன் கைகுலுக்கலாம்.
எமக்கு Heros மற்றும் Heroines ஆக தெரிபவர்கள் யார்?
மற்றவர்கள் செய்ய பின்வாங்கும் விசயங்களை தைரியமாக பொறுப்பு எடுத்து அதனை முன்மாதிரியாக திட்டமிட்டு திறம்படச் செய்பவர்களே அவர்கள்.
எமது வழமையான வாழ்வியல் நிகழ்வுகளை வழமைக்கு மாறாக ஒன்று சேர்ந்து ரசனையுடன் மாற்றி மாறாத பசுமை நினைவுகளாய் நாம் வாழும் வரை நீளச் செய்பவர்கள் அவர்கள்.
ஏன் அவர்களை நாம் செயல்வீரர்கள் என்கிறோம்???
அவர்கள் அரிதானவர்கள், எண்ணிக்கையில் குறைந்தவர்கள்.
அவர்களின் திறமை கண்டு பாராட்டவேண்டும். நாம் வாழ்த்தவேண்டும்..
இனம் கண்டு கௌரவப்படுத்த வேண்டும்.
அவர்களின் செயல்வெளிப்பாடுகள் சமூகத்திற்கு தேவையானது.
எனது ஒரு கனிவான வேண்டுகோள் அது…
அடுத்த சந்திப்பின்போது இந்த கதாநாயகர்களுக்கு கழுத்தில் மாலை அணிந்து கௌரவிக்கவேண்டும்.
நாம் எல்லாம் நண்பர்கள் தானே…. ஏற்ற தாழ்வு இல்லையே…

அதனால் எங்கள் தோல்களில் தூக்கி அவர்களை உயரகாட்டுவோம்.
நம்மவர் என்று சொல்லி பெருமைகொள்வோம்.
ஏன் என்றால், அவர்கள் தான் இந்தநிகழ்விற்கு பிள்ளையார் சுழி இட்டவர்கள்.
கருவாக உருவாகிய சிந்தனையை திட்டமிட்டு செயலாக்கி.. அதை பெரும் நிகழ்வாக்கி…
பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தவர்கள் அந்த செயல் வீரர்கள் மற்றும் வீரிகள்…
சரி விசயத்திற்கு வருவம்.
எங்கு? தொடங்கியது இந்த நிகழ்வின் ஆரம்பம்???
எங்கட சிவகாமியும் மற்றும் கோகுலனும் ஊருக்கு வருகிறார்கள் 2023 இல்.
இருவரும் தங்கள் தனிதனியாக நட்புக்களை சந்திக்கிறார்கள்.
இதன்போது இருவருக்கும் ஒரு யோசனை தோன்றுகிறது அது.
நாங்கள் ஏன் Vada 99 என்ற ஒரு ஒன்று கூடலை நடத்தகூடாது என்று?
இருவரும் இந்த விடயத்தை நிசாந்தனுடன் (சிங்கப்பூர்) கலந்துரையாடுகிறார்கள்.
அந்த ஐடியா நிசாந்தனுக்கு பிடித்துபோகிறது.

உடனடியாக சிவகாமியுடனும் கோகுலனுடனும் சேர்ந்து செயல்வடிவம் கொடுக்க தயாராகிறான் அந்த செயல் வீரன்.
அங்குதான் இந்த நிகழ்விற்கு பிள்ளையார் சுழி கச்சிதமாக இடப்படுகிறது.
காலம் கடத்தாமல் உடனே சிறிய கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்கள்.
அந்த கலந்துரையாடலில் நிசாந்தன், கிரி, றொனி, லோகராஜ், சுரேஸ் இவர்களுடன் சிவகாமியும கலந்துகொள்கிறார்.
இதன்போது வடமராட்ச்சியில் இருக்கும் பாடசாலைகளை எவ்வாறு தெரிவுசெய்வது அதனை எப்படி ஒருங்கிணைப்பது பற்றி ஆராயப்படுகிறது.
உடனடியாக நிசாந்தனுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்த ஜெனோவையும் லோகராஜ்யையும் தொடர்பு கொள்கிறான்.
அவர்களும் நிசாந்தனின் செயல் வேகத்துக்கு ஈடுகொடுக்கிறார்கள்.
இதனை அறிந்த மஞ்சுளாவும் கார்த்திகாயினியும் அதேவேகத்துடன் இவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள்.
அதேபோல் செந்தில் வருகிறான். கனடாவில் தனது தொடர்பில ;ஏற்கனவே இருந்த நண்பர்களை ; இருக்கும் நண்பர்களை இணைக்கிறான்.
அதே போல் Jeayakumar உள்ளே வருகிறான் தனது தொடர்பில் இருக்கும் அவுஸ்திரேலியா நண்பர்களை இணைக்கிறான்.
அத்தோடு பாரதி வந்து இணைகிறான். அவனின் கைவண்ணுமும் மற்றும் கலைவண்ணமும் நிகழ்வின் பல பகுதிகளில் பட்டுத்தெறித்தன.
சிவகாமியின் கலைநய படைப்புகள் குறித்தும்
அது பற்றி இரண்டாவது பகுதியில் எழுத உள்ளேன்.
அதேபோல் சிவகாமியும் ஜெயகலாவும் இணைந்து தனது தொடர்புகளை பயன்படுத்தி நண்பர்களை இணைக்கிறார்கள்.
இவ்வாறு அந்த கலந்துரையாடல் வட்டம் சற்று பெரிதாகி தனது வேலையை கச்சிதமாக காட்ட ஆரம்பிக்குது.
ஒருங்கிணைப்பு வேலைகளுக்காக ஒரு ‘வட்ஸ் அப்’ மற்றும் ‘வைபர்’ குறூப் உருவாக்கபடுகிறது.
பொறுப்புகளை பொறுப்பெடுத்துக’கொண்டவர்கள் அதன் பொறுப்புகளின் அடிப்படையில் ‘வட்ஸ் அப் குறூப் ‘ தரப்படுத்தபடுகிறது.
பின்னர் தொடர்ச்சியாக வழிநடத்தபடுகிறது பொறுப்புகளின் அடிப்படையில்.
நண்பர்கள்,நண்பிகள் தொடர்ந்து இணைக்கப்படுகிறார்கள்.
அதில் நானும் மற்றவர்கள் போல் இணைக்கபடுகிறேன்.
‘ whatsup ‘ அத்துடன் ‘viber’ மூலம் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வழிநடத்படுகிறது.
நான் கொழும்பில் வசிக்கிறேன்.
போதைபழக்கம் மற்றும் அதன் பாதகவிளைவுகள் சம்பந்தமான விழிப்புணர்வு வீடியோ தயாரிப்பிற்கான
Script and Screenplay வேலைக்காக ஒரு Meeting இருந்தது யாழ்ப்பாணத்தில்.
அதற்காக ஊருக்கு போகவேண்டி இருந்தது.
அதன்பின் அது சம்பந்தமாக சிலரை சந்திக்கவேண்டி இருந்தது.
அதனுடன் சேர்த்து எனது சில விவசாய முயற்சிகளுக்காகவும் செல்லவேண்டி இருந்தது
உண்மையில் இந்த நிகழ்வுக்காக எனது இந்த இரண்டு நிகழ்ச்சிநிரல்களுடன் சேர்த்துக்தான் திட்டமிட்டு நேரம் ஒதுக்கி இருந்தேன்.
என்னுடன் கோகுலன் தொடர்பிலேயே இருந்தான்.
எங்கள் வட 99 ரீ–சேர்ட் பெற்றுக்கொள்வதற்காக சில தினங்களுக்கு முன் அவனுடன் கதைத்தேன்.
கோல் எடுத்தவுடன்
அவன் ..
‘ டேய் மச்சான் நீ வாறாய் தானே நாங்கள் கிட்டதட்ட 60 பேர் வெளிநாட்டில் இருந்துவாறம் உனக்கு தெரியும் தானேடா…கிட்டதட்ட இப்பமட்டும் 38 இலட்சம் செலவாகிற்றுதுடா..பெடியள் அந்தமாதிரி செய்யிறாங்கள் நீ அது வழிய நிண்டு மினக்கடாமல் வேளைக்கு வந்திர்றா என்ன?
ஓ மடா மச்சான்….
சரிடா அங்க கதைப்பம்
.
சரி மச்சான்…
(தொலைபேசி துண்டிக்கப்பட்டது)
சற்றுநேரம் மௌனம் ஆனேன்.
எங்கட பெடியளின் திட்டமிடலை நினைத்து பெருமைபட்டன்.
எனக்கு நெருங்கிய உறவினர்களுக்கு இந்த நிகழ்வின் திட்டமிடலை சொல்லி பெருமைபட்டுக்கொண்டேன்.
என்ர மனுசிக்கும் பெரிய எடுப்பா எங்கட பெடியளின் ஏற்பாட்டை விபரமா சொன்னன். பெடியளின் செலவு விபரத்தையும் பெருமையாக சொன்னன்.
அதுக்கு பிறகு மனுசி உசாராகி வெளிகிட்டு என்னையும் கொழும்பு ‘ Pettah ‘ கூட்டிக்கொண்டுபோய் புதுசா எங்கட பொடியளின் ‘ திமுக்கு’ (Theme) ஏற்றவாறு உடுப்பு எடுத்து தந்தது.
உடுப்பு செலக்ட் பண்றதுல என்ர ஆள் என்னை விட சுப்பர் ஆனால் கடைகாரன் செத்துபோடுவான் செலக்சனுக்கு உடுப்பு கொடுத்து (காசு என்ரதான்
)
எங்கட கோகுலனின் போன் மிரட்டலின் பின் எனது சில நிகழ்ச்சி நிரல்களை மாற்றி அமைத்துக்கொண்டேன்.
வடா 99 முன்னுரிமை கொடுத்தேன்.
அந்த நாளும் வந்தது நானும் ஊருக்கு வந்தேன்.
அங்கு பெடியள் கேட்டுக்கொண்டபடி அவங்கள்
பிரிண்ட் பண்ணிய எங்கட ரீ–சேர்ட் போட்டுக் கொண்டு எங்கள் பாடசாலை மைதானத்திற்கு சென்றேன்.
வாசலில் வருகை தருபவர்களை பதிவுசெய்வதற்கான ஒரு மேசை இருந்தது. அங்கு பதிவு செய்வதற்கு நின்றவர்கள் கனிவாக பதிவினை மேற்கோண்டார்கள்.
என்னை அங்குபதிவு செய்துகொண்டு உள்ளே நுழையும் போது
அங்கு எங்கள் நிகழ்வுக்கான பாதுகாப்பு கடமைக்காக இரு பொலிசார் சீருடையுடன் தங்களுக்குள் சகோதர மொழியால் கதைத்துக்கொண்டு மைதான வாசலால் உள்நூழைவதை அவதானித்தேன்.
பெடியளின் கச்சிதமான திட்டமிடலை வாசலிலேயே உணர்ந்தேன்.
பெருமையுடன் உள் நுழைந்து நிமிர்ந்து பாhத்தபோது முதலில் நான் கண்ட பெடியள்
எங்கள் யேசு மற்றும் எங்கட கிரி.
ஜேசு ஆட்களை அணைத்து சிரித்தபடி மெதுவாக அங்கும் இங்கும் நடந்து திட்டமிட்ட வேலைகள் சரியாக நடைபெறுகிறதா எண்டு பார்த்துக்கொண்டு திரிந்தான்.
ஆனால் கிரி எல்லாருக்கும் தெரியும் தானே கத்திக்ககொண்டே தன்ர வேலையை காட்டினான். (50 ரூபா கொடுத்தால் 500 ரூபாக்கு வேலை செய்வான்)
கைகுலுக்கி கொண்டேன் யேசுவுடன். கிரியுடன் முடியவில்லை அவனை பிடிக்க.
யேசு ஹாட்லிமைதானத்திற்கு காலை ஏழு மணிக்கே வந்து விட்டானாம்.
அன்றைய சாப்பாட்டு தயார்படுத்தலின் நாயகர்கள் கிரியும் யேசுவும்.
அந்த இரு நாயகர்களின் வேலைகளும் அவர்களின் ஸ்டைலிலேயே இருந்தன.
அப்படியே நடந்து செல்லும் போது….
நான் எங்கட வில்லுப்பாட்டு குழுவுக்கு நான் விசில் அடிக்காத குறை… என்ன நேர்த்தியான இசைப்படைப்பு,
பழைய ஞாபகங்களை பக்கத்தில் கொண்டு வந்தது.
எமது நண்பர்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட அந்த நிகழ்வில் குடி தண்ணீருக்கோ, யூசுக்கோ பஞ்சம் இல்லாமல் வழங்கப்பட்டு கொண்டு இருந்தது.
அதிலயும் எங்கட காந்தியின் கைவண்ணம் அந்த ஐஸ்கட்டி போட்டு கொடுத்த ‘நெல்லி கிறஸ்’ யூசில் தெரிந்தது. அந்த மைதான வெய்யிலுக்கு இதமாக இருந்தது.
நான் யூஸ் நினைவு வரும் போது எல்லாம் போய் குடித்துக்கொண்டிருந்தேன்.
ஏன் என்றால்..
சரியான திட்டமிடலுடன் ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தது.
வழமைபோலவே எல்லா எங்கட நிகழ்வுகளுக்கும்
முதலாவதாகும் மும்மரமாவும் இயங்கும் எங்கள் நிர்மலன் (நிம்மி) மற்றும் கோகுலகுமார் (கோகுலப்பா) பங்குகள் எப்போதும் மறக்க முடியாதவை.
இவங்கள் கதிரை தூக்கவும் சரி, கஞ்சி குடுக்கிறதுக்கும் சரி முன்னுக்கு நிக்கும் எங்கட முதன்மையானவங்கள்.
அங்கு மும்மரமாக இயங்கிகொண்டு இருந்தார்கள்.
எத்தனை பேரும்… எவ்வளவும் குடிக்கலாம் என்ற தொனியில் தாராளமாக இருந்தது.
அடிக்கும் வெய்யிலில் காயாமல் வந்து அமர சிறப்பான பந்தல் அமைப்புகள்.
அப்படியே எங்கட பொடியள் பெட்டைகள் தங்கள் நண்பர் நண்பிகளை கண்டு கைலுக்கி பழைய கதைகள் கதைக்க.
அவர்களின் பிள்ளைகள் மைதானத்தில் சும்மா நின்று கொட்டாவி விடாமல் இருக்க அவர்களுக்காக ஒழுங்கமைக்கபட்ட சின்னதுகளுக்கான விளையாட்டுகள் சுப்பர்.
அதனை சரியான முறையில் ஒழுங்கமைத்த எங்கட பெடியள் பெட்டைகளின் அவுஸ்ரேலியா குறூப்புக்கும் எங்கட றொனியின் மெட்றோ கம்பஸ் நிறுவன ஊழியர்களின் திறமையை குறிப்பிட்டு இங்கு சொல்லவேண்டும். அவ்வளவு கச்சிதமாக சரியான நேரத்துடன்நிறைவு செய்தார்கள்.
மைதானத்தில் விளையாடி களைத்து வந்தவர்களுக்கு உடனடியாக நீர் மற்றும் யூஸ் குளிர குளிர..
அதன்பின் எங்கட பொடியள் மற்றும் பெட்டைகளின் விளையாட்டு போட்டி அதை என் வீடியோ பதிவில் பார்த்து ரசியுங்கோ.
அதன்பின் அந்த ஒடியல் கூழ் எங்கட யேசுவின் கை வண்ணம்.
அதன் தரமான சுவையும் மணமும் காரமும் எங்கள் ஊரின் சுவையும் நாக்கையும் மூக்கையும் துளைத்தது.
எனக்கு ஏற்கனவே சளி பிடித்து இருந்தது. அருமையான அந்த கூழ் அதன் வேலையை கச்சிதமாக காட்டியது.
சளியை விரட்டியது. மூக்கால் வழிய தொடங்கியது. வாயில் ஆரோ பெற்றோல் ஊத்தி நெருப்பு வைத்தது போல் ஒடியல் கூழுக்கே உரிய காரம்.
பொதுவாக ஒடியல் கூழ் குடித்த உடனேயே தண்ணீர் அருந்துவது இல்லை அதை நான் கேள்விபட்டு இருக்கிறன்.
ஆனால் ஏன் என்ற விளக்கம் எனக்கு தெரியாது.
நான் அதை ஏன் என்று கேட்காமல் கடைப்பிடிக்கிறேன்.
அதை நான் மைதானத்தில் கூழ் அருந்தும்போது என் பக்கத்தில் கூழ் குடித்துக்கொண்டு இருந்த கோகுலனுக்கு சொன்னேன்
அவனும் அதை விளக்கம் கேட்காமல் ஏற்றுக்கொண்டான்.
வெளியில நெருப்பெடுக்கிற வெய்யில்,
வாயில யேசுவின் கூழ்ன்ர காரம் நாக்கில நெருப்ப கிழப்ப காதால புகையை தள்ளியது.
தாங்க முடியாமல்…. பக்கத்தில் கொட்டகையில் ஐஸ் போட்ட நெல்லிகிறஸ் யூஸ் ஐ எடுத்து வாயில் விட்டன்.
ஒரு மாதிரி வாயில் எரிந்த நெருப்பு சாதுவாக அணைந்து காதால் வந்த புகை குறைய கோகுலன் இதை பாத்திட்டான்.
நக்கலா சத்தம் போட்டு கேட்டான். (அவன்ர சத்தம் தெரியும் தானே எங்க எல்லாருக்கும்)
‘டேய், நீ எங்களுக்கு கிளாஸ் எடுத்திட்டு நீ கூல் யூஸ் குடிக்கிறாய்’ என்றான்.
‘மச்சான் யேசுன்ர கூழுக்கு முன்னால என்னால தாக்குபிடிக்க முடியலடா?
அடுத்தது எங்கட மத்தியான சாப்பாடு ஏற்பாடு
மத்தியான சாப்பாட்டு ஒழுங்கு விசயத்தில் ‘ Man of the match’ எங்கட கிரிதான்
ஆட்டு இறைச்சிகறியுடன் சாப்பாடு.
ஆட்டு இறைச்சிக்கான பொறுப்பு கிரிக்கு கொடுக்கப்பட்டது.
கிரி கணக்கு போட்டு பார்த்தான் (தகப்பனும் கணக்காளர்)
கடையில் ஆட்டு இறைச்சியை வாங்குவதை விட ஆட்டை வாங்கி பங்கு போடுவது இலாபமாக அவனுக்கு பட்டது.
கிரி தற்போது சிவில் கட்டுமான பணிகள் பல இடங்களில் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறான்.
அவனது ஒரு வேலைத்திட்டம் பூநகரியில் ஒன்று நடந்து கொண்டு இருந்தது.
அங்கிருந்து ஆட்டு கிடாய் கொண்டு வருவதற்கு அங்கிருந்தவர்களுடன் கதைத்து முடிவெடுக்கிறான்.
ஆட்டுகிடாய் பூநகரியில் இருந்து கொண்டுவரப்படுகிறது வாகனத்தில்.
ஆட்டுகிடாய் கொண்டுவரும் வாகனம் பொலிசாரினால் மறிக்கப்படுகிறது.
ஆட்டினை பூநகரியில் இருந்து பருத்தித்துறைக்கு கொண்டுவருவதற்கான மிருக வைத்தியரின் வழித்தட அனுமதி இல்லாததால் பொலிசாரினால் ஆட்டினை பருத்தித்துறைக்கு கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த நடைமுறை எங்கள் கிரிக்கு தெரியாது.
ஆனாலும் இந்த சூழ்நிலையில் கிரி தடுமாறவில்லை. உசாராகிறான்.
சாய்ந்து…. சரிந்து…..
‘ சிரிக்க ‘ வேண்டிய இடத்தில் சிரித்து.
‘ கொடுக்க ‘ வேண்டிய இடத்தில் கொடுத்து.
‘ பதுங்க ‘ வேண்டிய இடத்தில் பதுங்கி.
ஒரு புது அனுபவத்துடன் ஆட்டை மீட்டுக்கொண்டு பருத்தித்துறை நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறான்.
கிரியின் இந்த முயற்சியினை நான் நகைச்சுவையாக எழுதியதற்காகஇலகுவாக கடந்து செல்லமுடியாது ஏன் என்றால் தனி மனிதனாய் பிரச்சனைக்கு முகம்கொடுத்து தீர்வினை கண்டுள்ளான்.
அது மட்டுமல்ல இந்த புத்திசாலித்தனமான செயலால் மதிய சாப்பாட்டு செலவை திட்டமிட்டு கிட்டதட்ட ஒரு இலட்சத்தை சேமித்து இருக்கிறான்.
கிரியின் இந்த விளையாட்டுக்கு ஒரு ‘சலூட்’ அடிப்பம்…
குறிப்பு –
நான் செல்லும் இடங்களில் என்னை கவரும் விடயங்களை பதிவுசெய்வது எனது விருப்பங்களில் ஒன்று.
பின்னர் அதனை தொகுத்து யூரீயூப்பில் வெளியிடுகிறேன்.
1000 subscribers இருந்தால் youtube நிறுவனம் ஒரு சிறந்த Channel ஆக எனது Channel ஐ அங்கீகாரம் வழங்கும்
எங்கட பெடியள்…..
மற்றும் எங்கட பெட்டைகள்……
இதற்காக எனது சனலை subscribe பண்ணும்படி உங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னை 1000 subscribers ஐ தாண்ட உதவிசெய்யுங்கோ….
இரண்டாம் தொகுப்பு வெகு விரைவில் வெளியிட
உள்ளேன்.
‘ subscribe ‘ பண்ணி bell button ஐ தட்டிப்போட்டு கையை தூக்துங்கோ…..டா….(டீ) !!!
உடனடியா அலர்ட் நோட்டிவிக்கேசன் வரும் நன்றி.
சரியோ பெடியள் மற்றும் பெட்டைகள் ……. நன்றி டா (க்கள்.) (டீ) (க்கள்.) ….
சிறு குறிப்பு – யாரையாவது குறிப்பிடாமல் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் பெரிய மனதுடன், வம்பு வேண்டாம்…. வன்முறை அறவே வேண்டாம்.
உங்கள் கருத்துக்களையும் தயவுசெய்து பதிவிடுங்கள்.
– எழுத்து –
வி.நிசாந்தன்