பளையில் பேய், பனையில் நேருப்பு.

ஒரு சனிக்கிழமை, 8 ம் மாதம், இரவு 7.40 மணி இருக்கும்.

கிளிநொச்சியில் இருந்து கொடிகாமம் நோக்கிய பயணம்.

வேலை நெருக்கடிகள் இல்லை. ஆறுதலான, பரபரப்பு இல்லாத ஒரு மோட்டார் சயிக்கிள் பயணம்.

இயற்கையை ரசித்தபடி.

றோட்டின் இரு பக்கமும் மாறி மாறி பார்த்தபடி பயணிக்கிறேன்.

இயக்கச்சியை கடந்து பளையை அண்மித்துக்கொண்டிருக்கிறேன்.

அப்போது…

எனது வலது புறத்தில் றோட்டின் ஓரத்தின் இருந்து சற்று தூரத்தில் வானத்தில் அந்தரத்தில் நெருப்பு எரிவது போன்ற ஒரு தோற்றம்.

அந்த தோற்றம் என்னை குழுப்பமடைய வைக்கிறது.

மோட்டர் சயிக்கிளை அதன் நேருப்பு எரியும் பக்கத்தின் எதிர்புறமாக நிறுத்திவிட்டு றோட்டினை குறுக்காக நடந்து சென்று றோட்டு ஓரத்தை கடந்து நின்று அந்த நெருப்பை அவதானித்தேன்.

இரு பனை மரங்களின் உச்சியில் நெருப்பு பிடித்து எரிகிறது.

அது தூரத்தில் இருந்து பார்க்கும் போது அது பலவிதமான தோற்ற வெளிப்பாடுகளை கணத்திற்கு கணம் காட்டுகிறது.

காற்று பலமாக வீச நெருப்பின் உக்கிரம் கூடுகிறது,

செந்நிறம் கொப்பளிக்கிறது. அதில் இருந்து தணல்கள் தெறித்து பறக்கிறது.

புகையுடன் தணல் துகள்கள் காற்றுடன் கலந்து பரவி புகையினுடாக செந்நிறத்iதை செலுத்துகிறது.

வெடித்து பறக்கும் நெருப்பு தணல்கள் பக்கத்தில் இருக்கும் மரங்களின் கிளைகளில விழுகிறது. அந்த மரக்கிளைகள் பலத்த காற்றில் அசைகிறது…அந்த உயரத்தில் இருந்து மீண்டும் பரவுகிறது. அது தொடர்ந்து நடைபெறுகிறது.

சுழன்று அடிக்கும் காற்றில் நெருப்பில் இருந்து கழன்ற செந்தழல்கள் எல்லா இடமும் பரவுகின்றன.

நெருப்பு கொழுந்து விட்டு எரியும் இடத்தில் சில வெடிப்பு சத்தங்கள் மெதுவாக கேட்கின்றன.

அவை காற்றின் உரசல் சத்தத்தோடு சேர்ந்து ஒரு வினோத சத்தத்தை எழுப்புகின்றது.

நெருப்பில் இருந்து கிளம்பும் புகையினுடாக நெருப்பின் செந்நிறத்தை வானத்திற்கு புகை துகள்களினுடாக மேல் நோக்கி அனுப்புகின்றது.

அது ஒரு புது வித தோற்றத்தை அங்கு தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகின்றது.

இதனை பார்த்துவிட்டு இந்த நெருப்பு பரவியதற்கான காரணம்

சுழன்று அடிக்கும் காற்றும் மண்டையை பிளக்கும் வெய்யிலும்தான்

யாரோ எங்கேயோ வைத்த நெருப்பு இங்குவந்து காய்ந்து கிடக்கும் சருகுகளில்தாவி பனையில் ஏறி தன் விளையாட்டை காட்டுது என்பதை அறிந்து கொண்டேன்.

நல்ல இருட்டு எனது கைத்தொலைபேசியால் இயலுமானவரை ஒளிப்பதிவு செய்துவிட்டு.

சற்று நேரம் நின்று விட்டு மோட்டார் சயிக்கிளில் ஏறி புறப்பட்டேன்.

அப்போது தான் நான் யோசித்தேன்.

இந்த மாதிரியான நெருப்பு மற்றும் இதன் தோற்ற வெளிப்பாடுகள்.

விஞ்ஞானம் வளராத பழைய காலங்களில் எமது முன்னோர்களை எப்படி எல்லாம் வெருட்டி இருக்கும் என்று….

அதனை..

..

அவர்கள் ..

..

அப்போது ….அந்த காலத்தில்.

‘ கொள்ளிவால் பேய் ‘ என்று இருப்பார்கள்.

‘ தூரத்தில் பேய் ‘ என்றிருப்பார்கள்.

‘ மரத்தில் பேய் ‘ என்றிருப்பார்கள்..

எத்தனை கதைகள் உருவாகி இருக்கும்.

எத்தனை மந்திரவாதிகள் இதனால் வாழ்ந்திருப்பார்கள்.

இதனை வைத்து எத்தனை பேர் எந்தனை பேரை

எவ்வாறு எல்லாம் ஏமாற்றி இருப்பார்கள்.

எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்த இந்த வீடியோவினை பலருக்கு நான் காட்டி

‘ இது என்ன? என்று சொல்ல முடியுமா? ‘ என்று கேட்டேன்.

சிலர் தெரியாது முழித்தார்கள்.

சிலர் யுத்தகால நினைவுளை இழுத்து கொண்டு வந்தார்கள்

அதில் சிலர் ‘பேய்’ என்றார்கள்.

சிலர் கடவுள் என்றார்கள்.

நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் …

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்…

நன்றி.

– எழுத்து –

வி.நிசாந்தன்

www.vnishanthan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *