Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பருத்தித்துறையின் பஸ் தரிப்பிடத்தின் அண்மையில் உள்ள கடைத்தொகுதிகளுக்கு மத்தியில் முதலாவது மாடியில் அமைந்துள்ள மாடியின் மத்தியில் இவ்வளவு காலமாக இயங்கிவந்தது பருத்தித்துறை மரக்கறி சந்தை.
முதலாவது மாடிக்கு பொருட்களை சுமப்பதில் சிரமம், பொருட்கள் வாங்க வருபவர்கள் அதுவும் வயதானவர்கள் மாடிக்கு ஏறவதில் சிரமம் என அது சம்பந்தமான பல சிக்கல்கள் இருந்து வந்த நிலையில்
தற்போது மீன் சந்தை இயங்கும் தெருவுக்கு சற்று தள்ளி இந்த மரக்கறி சந்தை நகர்ந்துள்ளது.
தற்போதும் அந்த இடத்தில் சந்தை சரியாக இயங்குவதற்று பல இடர்கள் இருப்பதை சொல்லி சிணுங்கலையும், புலம்பலையும் கேட்க கூடியதாக இருந்தது.
ஊருக்கு போயிருந்தேன் புதுவருட கொண்டாட்டத்திற்காக.
அப்ப மரக்கறி வாங்க சந்தைக்கு போனேன் போன போது என் கைத்தொலைபேசியல் வீடியோ எடுத்தேன்.
உங்களுடன் பகிர்கிறேன். பிடித்திருந்தால் பாருங்கள். ரசிக்க கூடியதாக இருந்தால் பகிருங்கள்.
நன்றி.
எழுத்து.
வி.நிஷாந்தன்.