பருத்தித்துறை ஓடக்கரை அப்பதட்டி

நாம் படித்த காலங்களில் அதாவது 1998 – 2000 அப்ப தட்டிகள் பரவலாக எங்கள் ஊரில் காணப்பட்டன.

பின்நேரங்களில் அப்பதட்டிகளை தாண்டி சென்றால் தோசை வாசம் மூக்கை துளைக்கும். அப்பத்தின் வாசம் பிடரியை பிடிக்கும்.

சம்பலின் வாசம் காதை பிடித்து சாதுவாக இழுக்கும்.

சயிக்கிளை நிறுத்தி மதிலோரத்தில் சாத்திவிட்டு சயிக்கிளில் சாய்ந்து அமர்ந்து கொண்டு றோட்டை பார்த்துக்கொண்டு ஓடக்கரை தோசையும் அப்பமும்; சாப்பிட்டதை இப்ப நினைத்தாலும் வாயில் எச்சில் ஊறுது.

பச்சை மற்றும் சிவப்பு சம்பலுடன் சட்னி ஒன்றும் ஒட்டிக்கொள்ளும். அதோடு தோசை கறியும் சேர்ந்துகொள்ளும். அந்த கலவை மெருதுவான தோசைக்கு தெம்பூட்டும். அதோட முட்டை தோசை அது வேற ரகம்.
கள்ளு விட்டு புளிக்க வைச்ச அப்பம். அது கதை சொல்லும்.

அதுவும் முட்டையும் சேர்ந்து முட்டை அப்பம். அது ஒரு தனிசுவை.
‘எத்தனை பேருக்கு வாய் ஊறுது தயவுசெய்து ‘கொமன்ற்’ பண்ணுங்கோ. சரியே’

நாம் படித்த காலங்களில் தெரிவு செய்ய பல ‘அப்பதட்டிகள்’ அங்கொன்று இங்கொன்றாக இருந்தன.

தற்போது எனக்கு தெரிந்தவரை பழைய வடிவத்தில் விரல் விட்டு எண்ண கூடிய அப்ப தட்டிகளே உள்ளன பருத்தித்துறையில் என்பது என் கவலை.
கால ஓட்டத்திற்கு ‘அப்பதட்டி’ களும் விதி விலக்கல்ல ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ ஆனாலும் மனம் இலகுவாக ஏற்றுக்கொள்ள மறுக்குது.

நாம் ஊருக்கு போயிருந்தோம். எங்களுக்கு ஒரு சின்ன மகள் இருண்டு வயதில் அவளுக்கு அப்பம் வாங்கி தரவதற்கு ஏ.ஆ றோட்டில் இருக்கும் அப்பதட்டிக்கு போனேன் மணி கிட்டதட்ட இரவு 7 மணிக்கு மேல்.
அப்போது அங்க இரண்டு தம்பிகள் அப்பதட்டிக்கு வெளியில் இருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அவர்களின் அனுமதியுடன் நான் அந்த அப்பதட்டி காட்சியை வீடியோ பதிவு செய்தேன் எனது கைத்தொலைபேசியில். இரவு நேரம் இவ்வளவுதான் எடுக்க முடிந்தது.

அப்பக்கடை மற்றும் தோசை கடை எம்மை விட்டு போகும் முன் அழகான ஒரு அதைப்பற்றி அவணப்படம் எடுக்க விருப்பம். என்ன நடக்குது என்று பார்ப்பம்.
அதனை இங்கு பகிர்கிறேன்.

‘அது வழிய நிண்டு வீடியோ எடுக்காமல் வீட்டுக்கு வாங்கோ கெதியா அப்பத்தை கொண்டு மகள் நித்திரைக்கு போடுவாள், அது என்ர மனைவியின் ‘அசரிரி’ குரல் கேட்டது காதோரமாக
மீண்டும்…..

‘எத்தனை பேருக்கு வாய் ஊறுது இதை வாசிக்கும்போது தயவுசெய்து ‘கொமன்ற்’ பண்ணுங்கோ. சரியே’ அப்ப சந்திப்பம் மீண்டும்.

பாருங்கள்…. பிடித்தால் பகிருங்கள்.
நன்றி.

எழுத்து
வி.நிஷாந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *