Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
என்னிடம் ஒரு Teachers பட்டியல் இருக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பவர் திரு.ராஐரட்ணம் சேர் அவர்கள் ஆவணப்படுத்துவதற்காக
அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவோ, அவரின் பெருமை சொல்லவோ எனக்கு வயசும் காணாது.
அவரிடம் நான் ஒருவருடம் கல்விகற்றேன்.
சில இக்கட்டான சூழ்நிலையில் என்னை இலகுவாக தன்திறமையால் என்னை தூக்கிவிட்டார்.
நானும் அவரின் மாணவன் என்பதில் எனக்குபெருமை.
தலைமுறைகள்; தாண்டி பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டே வாழும் பருத்தித்துறை ஆழுமைகளில் இவரும் ஒருவர்.
எமது வயது போன கமராவும், (Caonon 6D ), கையடக்கமானMIc உடன் எனது நண்பருடன் அவரின் வீட்டுக்கு சொன்றோம்
எந்த வித முன்னறிவிப்பின்றி அவரின் வீட்டுக்கு சென்றோம்
நேரம் அப்ப மதியம் 11 மணி இருக்கும்.
வீட்டுபடலையில் கூட தட்டவில்லை. திறந்துகொண்டே உள்ளே சென்றேன் பல தடைவைகள் போய் இருக்கிறன்.
பெரும்பாலும் குறைந்தது மூன்று நாய்கள் குரைத்துக்கொண்டு வாசல் வரைவந்து வரவேற்பினம்.
அதை வந்த நண்பருக்கும் சொன்னேன்.
அவர் ‘கவனம்’ எண்டுசொல்லிவிட்டு நான் உள்ளே போனவுடன் படலையை பூட்டி தன் பாதுகாப்பை நாய்களிடம் இருந்து உறுதிபடுத்திகொண்டார்.
‘சேர்’ select பண்ணிவளர்க்கும் நாய்கள் உருவத்தில் பெரிதாகவும், குணத்தில் விறைப்பாக பொதுவாக இருக்கும்.
எனக்கு நாய்கள் மீது பயம் இன்றுவரை கொஞ்சமும் இல்லை ,நேசம்தான் அதிகம்.
அதனால் யார்வீட்டிற்கு சென்றாலும் நாய்களை பார்த்துபயப்படுவதும் இல்லை ஒதுங்கி நிற்பதும் இல்லை.
இன்றுவரை எனக்கு நாய் கடித்ததும் இல்லை. எந்த நாய்க்கும் நான் கல்லால் அடித்ததும் இல்லை.
எனக்கு தெரிந்த பலர், நாயைகண்டால் தலைதெறிக்க ஓடுவார்கள்.
அவர்களைத்தான் பல நாய்கள் சேர்ந்து round up பண்ணி இருக்கு.
அதில் என் தம்பியும் சிறுவயதில் ஹாட்லிக்கல்லூரி ground இல் இந்த மாதிரி தாக்குதலுக்கு உள்ளானார்.
பதறிகொண்டு வீட்டுக்குஓடிவந்து. அழுது அழுதே ஆஸ்பத்திரியில் ஊசிபோட்டுக்கொண்டார்.
இந்தநினைவுகளுடன் சேர் வீட்டுமுற்றத்தில் நடக்கிறேன்.
அங்கு…..
நீண்ட வெளிமுற்றம் நேர்த்தியாக கூட்டப்பட்டிருக்கிறது.வரிசையாக பூமரங்கள் வைக்கப்பட்டு நீர் ஊற்றப்பட்டிருக்கிறது.
வீட்டின் உயரமான அந்தஉள்முற்றத்தில் விருந்தினர் எப்போதுவந்தாலும் வரவேற்ககதிரைகள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கிறது.
‘சேர்’என்றுநான் அழைக்கிறேன்.
பதில் ஏதும் இல்லை.
மீண்டும் சத்தமாக’சேர்’என்றுஅழைக்கிறேன்.
‘ஓம்’என்று அந்த தடித்த குரல் கேட்கிறது.
‘யார்’
நான் ‘நிசாந்தன்’சேர்.
உள்ளிருந்து கடிகாரத்தைகையில் கட்டியபடி வெளியே வந்துவாசலால் என்னைபார்க்கிறார்.
‘அடே வாடா,நீ போஸ்ட் மாஸ்டரின் மகன் தானே’
‘ஓம் சேர்’
நான்
வந்த விசயத்தை அவருக்கு சொன்னேன் .உடனடியாக சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்.
ஆனால்….
‘டேய் தம்பி என்னால ஐந்து நிமிடத்திற்கு மேல் நிக்கமுடியாது அதோட வெளியில 10 நிமிடத்திற்குமேல் உட்காரமுடியாது, சாப்பிட்டுவிட்டன் நித்திரை வருது பத்து நிமிசத்தில செய்துமுடிக்கலாமோ’ எண்டார்.
சவாலானகாரியங்களில் தான் ‘interest ‘அதிகம். எனக்கு.
நண்பர் இயலுமானவரை தோள் கொடுத்தார்.
கேள்விகளை மனதுக்குள் ஓட விட்டுக்கொண்டே’Mic’இனை Tune பண்ணிக்கோண்டே
கிட்டதட்ட ஏழு நிமிடத்தில் முடிப்பது என்று மனதுக்குள் திட்டம் போட்டேன்.
அவரின் பேச்சின் நகைச்சுவை நீங்கள் ரசிக்க சிலவற்ளை வெட்டி தூக்கவில்லை.
சில தனிப்பட்ட தகவல்களை தவிர்க்க சிலவற்றை வெட்டி தூக்கியிருக்கிறன்.
அவர் அன்று மட்டு மல்ல இன்றும் எமக்கு முன்னுதாரணமாகவே உள்ளார்.
பின் நடந்தவற்றை நீங்களை பாருங்கோவன்.
- எழுத்து -
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com