கரும்பலகையும் , வெள்ளை சோக்கும்

சந்தித்து நாம் வெகுநாள்

தொலை தூரம் சென்றுவிட்டோம்

இனி சந்திக்க வாய்ப்பில்லை

காலத்தின் வேகத்தில் காணாமல் போனோம்

நாங்கள்; சேர்ந்திருந்த காலம்

பொன்நிலவு பூத்தகாலம்

இனியும் நாங்கள்; சேரலாம்

காலம் பின்னோக்கி போகவேண்டும்;

இனியும் நாங்கள்; வாழலாம்

தொழில் நூட்பம் தொலையவேண்டும்

கரும்பலகையே, என்னால் நீ வெள்ளையானாய்

உன்னால் நான் குள்ளமானேன்.

நாம் இருவரும் ஒன்றாகி

பள்ளிகளிலும் பாடம் சொன்னோம்

சந்திகளிலும் செய்தி சொன்னோம்.

;சோக்கு’ துண்டை

வெடி குண்டாக்கி

மாணவன் மண்டையில்

வெள்ளை பொட்டு வைத்த

ஆசிரியரும் உண்டு.

‘சோக்கு டஸ்டரை’

வெடிகுண்டாக்கி

மாணவி மீது எறிந்து

வகுப்பறையை வெண்புகையால்

வெடித்து சிதறவிட்ட

ஆசிரியையும் உண்டு

போய் வருகிறோம் நாங்கள்

வாழ்க வளமுடன் நீங்கள்.

  • எழுத்து –
    வி.நிஷாந்தன்.
  • www.vnishanthan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *