கம்பளிப்பூச்சி

மண்ணுக்கு நச்சு உரம் போட்டு
எம் நெஞ்சில் அடித்தீர்.

புல்லுக்கு மருந்திட்டு
எங்கள் வயித்தில் அடித்தீர்.

உம் பிள்ளைகள் பிடித்து விளையாட
வர்ணம் காட்ட

நாங்கள் இல்லை இனி
உங்கள் சந்ததிகளுக்கு

எங்களை காட்டுங்கள் பாடப்புத்தகத்தில்

பதிவு செய்யுங்கள் எங்களையும்
நாங்களும் உங்களுடன் வாழ்ந்தோம்
கைகளில் தவண்டோம்
என்று நீங்கள் வரலாறு எழுத.

-  எழுத்து –
  வி.நிஷாந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *