‘Corona’ ஊரடங்கு சட்டத்தில் கொழும்பு

–   தூரத்தில் கத்தும் குயிலின் சத்தம் தெளிவாக கேட்குது.

–   வாகன சத்தம் சுத்தமாக இல்லை.

–   இயந்திர இரைச்சல்கள் இல்லை.

–   உபகரணங்களின் ஊறுமல்கள் இல்லை.

–   உடைக்கும் சத்தம், வெடிக்கும் சத்தம் இல்லை.

–   Silence மட்டும் சத்தமாக இருக்குது.

–   இரவிரவாக உழைக்கும் ஊர் உயிரிழந்து கிடக்குது.

–   றோட்டில் கூவிவிக்கும் வியாபாரிகளின் கூவல் மாயம்.

–   ஓய்வேடுத்து களைச்சாச்சு. எழுந்து எழுந்து தூங்கியாச்சு.

–  ரெலிபோன் மணிகள் அடிக்கடி அடிக்கவில்லை.

–  போனில் கோல் எடுத்தால் ‘கொறோனா’ தான் முதல் கதைக்குது.

–   ஒவ்வொரு குறுஞ்செய்தியும் நெடும் செய்தியாகுது.

–   உணவு சிக்கனம் விளங்குது.

–   ஊரடங்கில் ஊர் மட்டும் அடங்கவில்லை உணவும் அடங்குது.

–   நகரில் சத்தம் இல்லை நாம் மட்டும் வாழ்வதாக ஓருணர்வு.

–  எழுத்து  –
வி.நிஷாந்தன்                                                                                                                                                  www.vnishanthan.com

Total Page Visits: 623 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *