‘ Corona ‘ கொஞ்சம் பொறும்மா !!!!
 
ஆயுதம் இல்லை
யுத்தம் செய்யுது
 
சத்தம் இன்றி புமியில்
சுத்தம் செய்யுது மனிதரை
 
கூட்டமாய் மனிதரை
கூட்டில் போடுது
 
வாகனம் இன்றி
எல்லைகள் தாண்டுது
 
மேட்டு குடியையும்
போட்டு தாக்குது
 
பாரபட்சமின்றி
பதம் பார்க்குது
 
மனிதனில் ஏறீ
மனம் போல் பரவுது
 
அணுகுண்டு காரனையும்
அதட்டி பார்க்குது
 
ஏவுகணை விட்டவனும்
ஏங்கி நிற்கிறான்
 
விண்வெளியில் பாய்ந்தவன்
விழி பிதுங்கி நிற்கிறான்
 
வியாபாரம் செய்தவனும்
விளக்கமில்லாமல் நிற்கிறான்
 
ஆராட்ச்சி செய்தவனும்
அரை வழியில் நிற்கிறான்
 
ஆயுதம் வித்தவன்
அம்மணமாய் நிற்கிறான்
 
ஒரு கல விலங்கு (one cell animal)
கன விளக்கம் சொல்லுது
 
வணக்கம் சொல்லி
வரவேற்க கேட்குது.
 
குனிந்து கும்பிட
சொல்லுது
 
கால்கழுவி பின் கதவால்
வரசொல்லுது.
 
மஞ்சள் போட்டு
குளிக்க சோல்லுது.
 
தொட்டு உரஞ்சாமல்
கதைக்க சொல்லுது.
 
காய்கறி மட்டும்
சுவைக்க சொல்லுது.
 
வீட்டுக்கும் நல்ல புகைபோட
கேட்குது.
 
வீட்டுக்குள்ள விளக்கெரிச்சு
வளியை சூடாக்கசொல்லுது.
 
ஒன்று கூடும் இடத்தில் ஒருமாய்
விளக்கெரிக்க சொல்லுது
 
இன்னும் கனக்க சொல்லும்
போல கிடக்கு.
 
இறுதி செய்தி ஒன்று
உறுதியா சொல்லும் போல
 
உலகத்தை முடக்கி
ஊர்வலம் போக சொல்லுமோ?
 
அல்லது.
 
ஆதிக் குடிகளாய்
காட்டுக்குள் போக சொல்லுதோ?
 
உங்கள் கருத்துக்கள் தான் என்ன?
 
      – எழுத்து –
 வி.நிஷாந்தன்
www.vnishanthan.com
Total Page Visits: 694 - Today Page Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *