எங்கள் அரசியலாம்

பதினைந்து வருடத்தி;ற்கு முன்

அன்று….

கள்வரை காண்பது அரிது
கள்வர் கூடி திரிவது அரிது

கள்வர்கள் தேடி பிடிக்கப்பட்டு
தேதி குறித்து தட்டி திருத்தி
தகரம் கூட தங்கமானது

நல்லதோர் படையொன்று
நாகரீகமாய் இருந்தது
அங்கிருந்தவர் புனிதர்கள்

அங்கு சென்று திரும்பியவர்
செம்மணம் வீசினர்

முரண்பட்டவர் சிலர்
எட்டியே நின்றனர்

நல்ல குணம் மட்டுமே
வெளியில் தெரிந்தது

விரல் அசைவில் பலருக்கு
விக்கல் நிண்டது.

பார்த்த பார்வையிலேயே சிலர்
பச்சை பசு வாகினர்

கண்ணசைவில் பேச்சு வீரரின்
நாக்கு வரண்டது

பக்கம் எல்லாம் நல்லவர்களே
களைகளும் கச்சிதமாக களையப்பட்டன

இன்று…..

கள்ளக் கூட்டத்தில்
நல்ல கள்ளனை தேடும் நிலை

பெரிய பொய்யில்
சின்ன பொய்யை தேடும் நிலை

காட்டி கொடுப்பில்
குறைந்ததை தேடட்டாம்

வால் பிடிப்பில்
யார் சின்னதை பிடித்ததெண்டு தேடட்டாம்

பிரச்சாரத்தில் யார்
கொஞ்ச பொய் சொன்னது எண்டு பார்க்கட்டாம்

கதிரை சண்டையில் யார்
சின்னதாய் கேட்டதெண்டு அறியட்டாம்

குடுமி சண்டையில் யார்ர மயிர்
கொஞ்சமாய் பிஞ்சது எண்டு பார்க்கட்டாம்

சோரம் போனதில் சொந்தமாய்
யோசித்து போனவனை காணட்டாம்

அவருக்கு ‘வோட்டு’ போடட்டாம்
இதுதான் எங்கள் அரசியலாம்.

– எழுத்து –
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com

Total Page Visits: 507 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *