புல்லுப்பாயும் கள்ளும்
(வன்னி நினைவுகள்)
 
 
வன்னியில் வாழ்ந்து நாட்கள் என் வாழ்வில் வசந்தம்
 
 
ஆடம்பரம் இல்லாத இதமான இயல்பான வாழ்வு
 
 
அங்கு நடந்த பல சுவையான சம்பவங்களை நான் கடந்து
வந்திருக்கிறன்.
 
 
அதில் ஒன்றை உங்களுடன் பகிர எண்ணுகிறேன்.
 
 
அது அங்கு நான் இருந்த போது எங்களுடன் ஒருவர் இருந்தார்.
 
 
கரிய நிறம், கட்டையான தோற்றம், 50 வயதிலேயே பற்களை எல்லாம் இழந்து இருந்தார். அனால் பல்லில்லாமல் அவர் சிரிப்பது அழகு
 
 
 
சுருட்டு குடிப்பார், கிட்டதட்ட எப்போதும் மனுசன் கால்வாசி போதையிலேயே இருப்பார். அனால் அவர் தடுமாறியதை நான் பார்த்தது இல்லை.
 
 
 
நல்ல நகைச்சுவையாக பேசுவார். அவர் பெயர் ‘சுப்பு’
 
 
(பொதுவெளியில் பதிவு பகிரபடுவதால் அவரின் உண்மை பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காக)
 
 
நான் அவரை சுப்பண்ணை என்று அழைப்பேன். நானும் அவரும் அடிக்கடி நகைச்சுவையாக உரஞ்சி கொள்வம். கோவிக்கமாட்டார் சாதுரியமாக சாமாளித்து தப்பி கொள்வார்.
 
 
மற்றவர் மனம் நோக பேசமாட்டார்
 
 
அவர் சாதுரியமாக சமாளித்து தப்பும் விதம் ரசிக்ககூடியதாக இருக்கும். அதை நினைத்து நீண்ட நேரம் சிரிக்க கூடியதாக இருக்கும்.
 
 
திறமையான சமையல் காரர் எமக்கெல்லாம் சுவையாக மட்டுமல்ல ஆரோக்கியமாகவும் சமைத்துத்தந்தவர் அவர் அப்போது.
 
 
அவரின் சமையல் அறையில் எப்போதும் கள்ளு, போத்தலில் மறைவாக இருக்கும்
 
 
அதை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருப்பார். அடிக்கடி அதை குடித்துக்கொண்டே சமைப்பார். கொஞ்சம் கூடினால்.
 
 
சின்னவிசயத்துக்கும்; பெரிசா சிரிப்பார். சமையல் முடிந்தவுடன் சாப்பிடாமலே தூக்கம் போட்டுவிடுவார்.
 
 
 
அவர் தூங்குவது ஒரு சிறிய ஒடுக்கமான வாங்கிலில் அனால் ஆடாமல் அரங்காமல் புரளாமல் படுப்பார். நாம் கொஞ்சம், நித்தரையில் அரங்கினாலும் விழந்து விடுவம்
 
 
 
ஆனால் அவர் விழாமல் படுத்து இருப்பார்.
 
 
கள்ளு கொஞ்சம் தலைக்கு ஏறினால் சாதுவாக புரளுவார்.
 
 
அவருக்கு சற்று தள்ளி நிலத்தில் புல் பாய் விரித்து அதன் மீது துணியிலான விரிப்பில் நான் தூங்குவது வழமை.
 
 
அன்று அப்படித்தான் ஒரு நாள் அவர் இரவு கொஞ்சம் கள் கூட குடித்து இருந்தார் சும்மா சும்மா சின்ன விசயத்தை கூட பெரிசா சிரித்து சொல்லிகொண்டு இருந்தார். அவரின் காதுக்கடி தாங்க முடியவில்லை
 
 
நானும் அவருடன் சாப்பிட்டுகொண்டு இருந்தேன். ஒரு யோசனை வந்தது.
 
 
அதன்படி
 
 
அவருக்கு முன்னதாகவே விரைவாக சாப்பிட்டு முடித்தேன் கட கட என்று.
 
 
சுப்பண்ணை உசாராகாமல் அவர் படுக்கும் வாங்கிலின் மேல் நான் படுக்;கபயன்படுத்தும் புல் பாயை போட்டு விரித்தேன். அது வாங்கிலை விட அகலமானது அதனால் வாங்கிலுடன் சேர்ந்து அது அகலமாக இருந்தது.
 
 
ஒடுங்கிய வாங்கிலும் மிஞ்சிய பாயின் பகுதியும் சேர்ந்து அகலமான வாங்கிலாக தோற்றம் தந்தது.
 
 
பாயின்; பாரம் கூடிய பக்கம் சரிந்து நிலத்தில் விழாமல் இருக்க சுப்பண்ணா பாவிக்கும் தலையணையை வாங்கிலுக்கு மெல் பாயின் மீது வைத்து சமநிலைபடுத்தினேன்.
 
 
இப்போது சுப்பண்ணை சாப்பிட்டு விட்டு தட்டை கழுவும் சத்தம் எனக்கு தெளிவாக் கேட்டது. சமையலறையில்
 
சட்டென்று நான் தூங்கும் இடத்தில் இருந்து சற்று தள்ளி துணிவிரிப்பை மட்டும் தரையில் விரித்து தலையணையை வைத்தேன்.
 
சுப்பண்ணை எப்படியும் வெறியில் நித்திரையில் புரண்டு படுத்கும் போது தரையில் விழுவார் என்பது எனது எதிர்பார்ப்பு
 
 
அதனால் அதற்கும் இடம்விட்டு படுத்தேன். எனக்கு மேல விழாமல் தரையில் விழ
 
 
நித்திரையில் உள்ளது போல் கண்ணை மூடிக்கொண்டு அவதானித்துக்கொண்டு இருந்தேன்.
 
 
சுப்பண்ணை வந்தார், பார்த்தார், மப்பு தானே சரியாக வாங்கிலில் படுப்பது போல் படுத்துறங்கி விட்டார் வாங்கிலின் ஒருமாக சாய்ந்து.
 
 
என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். சுப்பண்ணை வாங்கிலில் இருந்து பிரண்டு விழுவதை பார்க்க ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்.
 
 
அனால் நான் அப்படியே தூங்கிவிட்டேன். அப்ப ஒரு 12 மணி இருக்கும் சுப்பண்ணையின் குரட்டை சத்தமும் எனது எதிர்பார்ப்பு எண்ணமும் என்னை எழுப்பியது.
 
 
அப்ப சுப்பண்ணை சாதுவாக பிரண்டு படுக்க வெளிக்கிட்டார்.
 
 
வாங்கிலின் நுனிக்கு வந்து மறுபடி திரும்ப அப்படியே பாய் சரிய
 
 
நிலை தடுமாறி திடுக்கிட்டு பாயை பிடித்து கையால் இழுத்துக்கொண்டு வழுக்கி ‘படார்’ என்று நிலத்தில் சரிந்து விழுந்தார்
.
 
ஆனால்.
 
 
நிலத்தில் விழுந்த வேகத்திலேயே அப்படியே அடுத்தபக்கம் திரும்பி நிலத்தில் படுத்துவிட்டார்.
 
 
குறட்டை விட்டு அப்படியே நிலத்தில் தூங்கியும் விட்டார்.
 
 
நான் அப்படியே ‘சொக்’ ஆகி விட்டன்.
 
 
நான் அவர் விழுந்த விழுகை பார்த்து சிரிப்பதை விட அடுத்த பக்கம் திரும்பி அப்படியே படுத்து தூங்கி விட்டதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன்.
 
 
எனக்கு அந்த இரவு நேரம் நீண்டது. எப்ப எழும்புவார் என்று பார்த்துகொண்டு இருந்தன்.
 
 
அவர் வழமைபோல் 4 மணிபோல் எழுந்தார். ஆனால் வழமைக்கு மாறாமல் தரையில் இருந்து
 
 
அப்ப நான்
 
 
‘என்ன சுப்பண்ணை, வாங்கிலில் படுத்து நிலத்தில் இருந்து எழும்பிறியள் என்ன விசயம்? என்ன நடந்தது’ என்று கேட்டன்.
 
 
அதற்கு சுப்பண்ணை சற்றும் தாமதிக்காமல்
 
 
‘ஓம் தம்பி பாயில சரியான மூட்டை பூச்சி இரவு எல்லாம் சேர்ந்து கடிச்சுதுகள் அதுதான் இறங்கி படுத்திட்டன், நல்ல நித்திரை தம்பி’ என்றார் சற்றும் பதட்டபடாமல்.
 
 
நான் அதிர்ந்து போனன்.
 
 
இப்ப அதை நினைச்சாலும், சிரிப்பு வருது, வாழ்க்கை இனிக்குது.
 
 
 
       – எழுத்து –
  வி.நிஷாந்தன்
www.vnishanthan.com
Total Page Visits: 188 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *