துலா கிணறு

கிட்டதட்ட பதினைந்து வருடத்திற்கு முன் போத்தலில் குடிதண்ணீர் பார்த்ததே இல்லை எங்கள் ஊரில்

அப்பஇ தண்ணீர் போத்தலில் அடைக்கப்பட்டு காசுக்கு விற்கபட்டதாக நான் அறிந்ததும் இல்லை.

பொதுவாக எல்லா வீடுகளிலும் கிணறு இருந்தது.
அங்கங்கே இரு வீடுகளுக்கு பொதுவாக ஒரு கிணறும் இருந்தது
கப்பி கொண்டு வாளியால் கிணற்றில் தண்ணீர் அள்ளினோம்.
பொதுவாக கோயில்களில் துலா கிணறுகள் இருந்தது.

பெரிய வளவுகள் கொண்ட வீடுகளிலும் துலாகிணறு அங்கங்கே இருந்தது.

தோட்டங்களில் இறைப்புக்காக துலாகிணறு பெரிதும் பயன்பட்டது.
‘துலா மிதித்தல்’ என்று எங்கள் அப்பா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறன்.
நான் நேரில் பார்த்தது இல்லை.

தோட்டங்களில் நீரை விரைவாக பயிர்களுக்கு இறைப்பதற்காக ஒருவர் துலா மீது ஏறி அங்குள்ள கயிற்றை பிடித்தபடி துலாவின் நுனியில் இருந்து அடிவரை நடப்பாராம்

அதன்போது அவரின் நகரும் பாரத்தை பயன்படுத்தி துலாவின் உதவியுடன் பனை மர ஓலையால் செய்யப்பட்ட பட்டையை பயன்படுத்தி நீரை கிணற்றுக்கு வெளியே துலாவில் இருக்கும் கயிறின் உதவியுடன் வேகமாவும்இ விரைவாகவும் எடுப்பார்களாம்.

எல்லா ஊரிலும் ஒரு நல்ல தண்ணி கிணறு பெரும்பாலும் இருந்தது.
அதுக்கு பின்னேரம் எல்லோரும் படையெடுப்போம். ஒரு மஞ்சள் நிறத்தில் இருந்கும் பிளாஸ்டிக் 10 லீட்டர் கானுடன். வீட்டுக்கு நல்ல தண்ணீர் கொண்டுவர.

நாளாந்து வேலைகளில் அதுவும் ஒன்றாக இருந்தது.
நல்ல தண்ணீர் அள்ளுதல்

சயிக்கிளில் சென்றோம். பிளாஸ்டிக் கானை இரு கைகளுக்கு இடையில் சயிக்கிள் ‘bar ‘ இல் வைத்து balance  பண்ணி ஓடினோம்.
அந்த பிளாஸ்டிக்கானும் சயிக்கிளில் கச்சிதமாக எங்களுடன் குந்திக்கொள்ளும் சயிக்கிள் பாரில்.

அப்ப Mobile phone  இல்லை.

Wi – Fi  இல்லை

Viber  இல்லை

Whatsup இல்லை

அதனால் நேரம் இருந்து.

அடுத்தவருடன் அளவளாவ மனசு இருந்தது.

நல்லதண்ணி கிணற்றில் தண்ணி அள்ளியபடியே அரட்டை அடித்தோம்.

பலருக்கு நாம் காத்திருந்து நல்லதண்ணீர் நிறைத்து கொடுத்து உதவினோம்;.

தண்ணீரை நிறைத்த பின்னும் நின்று கதைத்தோம். நேரம் போக்க.
அங்கே அடுத்தவர் சுக துக்கங்களில் பங்குகொண்டோம்.

ஆலோசனை கேட்டோம் அனுதாபம் தெரிவித்தோம்.
சேர்ந்து சிரித்தோம்

சேர்ந்தே கவலைப்பட்டோம்.

நேரம் அப்ப நிறைவாக இருந்தது.

நேரம் போக்க நல்ல வழிகள் பல இருந்தது.

சொந்தகாரர் வீடுகளுக்கு சயிக்கிளில் குடும்பத்தோடு சென்றோம்.

ஒரு சயிக்கிளில் மூன்று பேர் பயணித்தோம்.

Play Ground இல் விளையாடினோம்.

அங்கு ஒன்று கூடி கலந்துரையாடினோம்.

சின்ன சின்ன சண்டைகளும் எம்மிடையே போட்டோம்.
கோவித்துக்கொண்டோம்

அடுத்த நாள் அதை மறந்து மீண்டும் விளையாடினோம்.
நண்பனின் திருமணத்திற்கு ஊரே சென்றோம்.

வாழ்துக்களை சயிக்கிளில் சென்று…..நேரடியாக வாயால் சொன்னோம்.

ஒரு வாழைமரத்ததை வெட்ட ஒன்பது சேர் சென்றோம்.
இரவிரவாக வேலை செய்தோம்.

சுக துக்கங்களை ஊரோடே பகிர்ந்து கொண்டோம்.
எமக்கு ஒன்றென்றால் சுற்றமே சூழ்ந்தது.

நாமும் யாருக்கும் என்ன வென்றாலும் ஓடினோம்.

செல் அடித்தாலும்….

குண்டு வெடித்தாலும்….

கிளாலியில் வெட்டினாலும்…

பங்கர் வெட்டினாலும்…

ஒன்றாக நின்றோம்….

ஆனால் இப்ப நாங்கள்????

                   – எழுத்து –
             வி.நிஷாந்தன்
        www.vnishanthan.com
Total Page Visits: 116 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *