எங்கட ஊரில் ஓருவர் வயது எண்பதுக்கு மேல் நல்லா நகைச்சுவையாய் கதைப்பார். பெயர் ராமு அண்ணை.

ஆனால் Tension Party அவர் சொல்வதை கேட்கவேண்டும் எதிர் கருத்துச் சொன்னால் Serious ஆக கோபப்படுவார், வாய்க்கு வந்த மாதிரி பேசுவார். துள்ளிகுதிப்பார்

பார்க்க நல்ல பம்பலாய் இருக்கும்.

அதன்போது நாம் அவரை பார்த்து சிரித்துவிட்டால் கையில கிடைக்கிறதால எடுத்து எறிந்தும் விடுவார்

அனால் அடுத்தநாள் ஏதுவும் நடக்காதது போல் கதைப்பார்.

அதுதான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த பண்பு.

நானும் அவருடன் அடிக்கடி முட்டிக்கொள்வேன்

அடுத்த நாள் கட்டிக்கொள்வேன்.

இது எனக்கு அறிவு தெரிந்தகாலத்தில் இருந்து நடக்குது.

நான் ஊருக்கு சென்றால் எப்படியும் மோப்பம் பிடித்துக்கொண்டு வந்திடுவார். அல்லது நான் மோப்பம் பிடித்துக்கொண்டு சென்றுவிடுவன் அது வழமை.

எனக்கும் அவருக்கும் கன Connection இருக்கு. (அது இங்க வேண்டாமே!!!)

இப்ப கடசியாய் ஊருக்கு போன நேரம்…

பொல்லை பிடித்துக்கொண்டு நடந்து எங்கட வீட்டுக்கு வந்தார்.

நான் சாரம் கட்டி இருந்தேன் கதைத்துவிட்டு என் காலை பார்த்து விட்டு சொன்னார்.

‘டேய் உன்ர காலெல்லாம் நல்ல முடியாய் (கால் ரோமம்) இருக்கு நீ நல்லா இருப்பாய் எடா, இப்ப மாறின கிரக மாற்றமும் உனக்கு சுப்பர்’ என்றார்.

அப்ப நான் சொன்னன்.

‘இஞ்ச, Hall இல் படுத்திருக்கிற எங்கட நாய்க்கும், பின்னுக்கு கொட்டிலில் கட்டி இருக்கிற எங்கட வெள்ளை ஆட்டுக்கும் கால் எல்லாம் மயிராத்தான் இருக்கு அப்ப அதுகளுக்கும் கிரக மாற்றம் சுப்பரோ’ என்று கேட்டன்.

முதலில் கோபத்தில் தன் கையில் வைத்திருந்த தனது கைத்தடியை பக்கத்தில் இருந்த வாழைப்பாத்திக்குள் எறிந்தார் ஆவேசத்துடன்.

அதுக்கு பிறகு சொன்னார் என்னை பார்த்து.

உன்னோடு கதைத்தால் ‘மனிசரையை விசராக்கிவிடுவாய்’ என்று சொல்லிவிட்டு.

கட கட வென நடந்து வீட்டு படலையை திறந்து வெளியில் சென்று விட்டார் வேகமாக.

நான் அன்று கொழும்பு திரும்பிவிட்டேன்.

நான் சென்ற பின் தன் கைத்தடியை வந்து எடுத்து சென்றதாய் தகவல்.

இந்த முறை போய் அவரை கட்டிப்பிடிக்க வேண்டும்.

– எழுத்து –
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com

Total Page Visits: 203 - Today Page Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *