திரு.இளையராஐரவின் இசை,மனதை இளகவைக்கிறது.

திரு.A.R ரகுமானின் இசை எம்மை அசையவைக்கிறது.

திரு.S.P.B இன் குரலில் நாம் கரைந்து போகிறோம்.

திரு.யேசுதாஸின் குரலில் நாமெல்லாம் நனைந்து போகிறோம்.

இசையும் குரலும் சேர்ந்து எம்மை தொட்டு தாலாட்டுகின்றன.

அதுசரி !

அனால் ?

எம்மூர் கலைஞர்களின் இசையை ஏன் நாம் கண்டு கொள்வதில்லை.

Local என்றாதால் நாம் Local ஆக பார்க்கறமா?

ஆனால்…

அவர்களும் குரலெடுத்துதான் பாடுகிறார்கள்.

அவர்களும் இசைதான் மீட்டுகிறார்கள்.

ஏற்றம் இறக்கம் எங்கும் இருக்கும்.

தவறுகளை தவறுதலாக இயற்கை கூட சிலசமயம் செய்கிறது.

வாய்புக்கள் தான் எல்லாத்தையுமே தீர்மானிக்கிறது.

எங்கட ஆட்களுக்கு விளம்பரஉத்தி (Marketing Technic) தெரியாமல் இருக்கலாம்.

தொழில் சார் பயிற்சி (Vocational Training) இல்லாமல் இருக்கலாம். அதற்கு வசதியில்லாமல் இருக்கலாம்

களம் இல்லாமல் இருக்கலாம்.

அவர்களின் தொழிலில் தொழில்நுட்பம் இன்னும் புகாமல் இருக்கலாம்.

திறமையானவர்கள் இலைமறை கனியாக கூட இருக்கலாம்.

தொழில் திறமை உள்ளவர்களுக்கும், நேர்மையாக முன்னேற விரும்புபவர்களுக்கும்

ஒரு வாய்ப்பு அளிக்கலாமே.

இந்த சிந்தனைகளோடு

எங்கள் Camera களும்;Mic களும் அவர்கள் பக்கம் திரும்பியபோது.

சிலவற்றை பதிவுசெய்தோம்.

இருள் கமராவின் கண்களை மறைத்துக்கொண்டிருந்தவேளை அது.

அவர்களின் இசையும்

என்னை

கரைய வைத்தது

அசைய வைத்தது

ஆட சொன்னது

இசைக்கு ஏது எல்லை?

நீங்களும் கேளுங்கள்….. உங்களுக்கு தோன்றியதை நீங்களும் Comment இல் பதிவுசெய்யலாமே?

– எழுத்து –
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com

Total Page Visits: 3014 - Today Page Visits: 35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *