பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்லா மூளை வேலைசெய்யும், வளரும் என்று கேள்விபட்டன்

மூன்று மாசமாக ஒரு தெரிஞ்ச கடையில முதலாளிட்ட சொல்லி நல்ல பேரீச்சம் பழமா வாங்கி தொடர்ந்து சாப்பிட்டன்.

மூளை வளர்ந்ததாக தெரியவில்லை மாற்றம் கொஞ்சமும் எனக்கு விளங்கவில்லை….

சரி எண்டுட்டு முதலாளிட்ட போய் கேட்டன்.

‘ அண்ணே பேரீச்சம் பழம் சாப்பிட்டு மாற்றம் ஒண்டும் இல்லை அப்ப வேண்டுற கடையை மாத்துவமா அல்லது பேரீச்சம் பழத்தை மாத்துவமா ’ எண்டு

அதுக்கு அவர் சிரித்துப்போட்டு சொல்றார்.

‘ இதெல்லாம் அந்த பேரீச்சம் பழத்தின் விளையாட்டுத்தான் ‘ என்கிறார்.

எனக்கு இதில உடன்பாடு துப்பரவா இல்லை

நீங்கள் என்ன நினைக்கிறியள் இதைப்பற்றி?

முக்கிய குறிப்பு – இது ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே நீங்கள் ஒருத்தரும் சீரியஸாக எடுக்கவேண்டாம்.

– எழுத்து –
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com

Total Page Visits: 436 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *