சில பொருட்களை அல்லது நபர்களை விளம்பரத்திற்காக அழகாக, கச்சிதமாக, கவர்ச்சியாக அழகியலுடன் காட்சிப்படுத்துவது Product Photography

இது Photography என்ற பெரிய மரத்தின் ஒரு கிளை.

இதன்போது Product Photography நடக்கும் Studio க்கு சம்பந்தபட்ட பொருட்கள் நகர்த்தப்படும்.

அல்லது நபர்கள் என்றால் Studio க்கு அழைக்கப்படுவார்கள் அது வழமை.

வழமைக்கு மாறாக எமக்கோரு Project அமைந்தது.

அது கிட்டதட்ட 6500 பொருட்கள் படப்பிடிப்புக்கு உட்படுத்தவேண்டும் ஒரு E- Commerce website க்காக அழகாக காட்சிப்படுத்தவேண்டும்.

அதுவும் பரபரப்பாக இயங்கும் ஒரு நிறுவனத்தின் ஒரு தளத்தில் எமது படப்பிடிப்பு இடம்பெற வேண்டும்.

Project ஐ ஏற்றுக்கொண்டோம்.

ஆனால் இது ஒரு சிக்கலான வேலைப்பளு கூடிய சிரமமான வேலை எமக்கு புரிந்தது. என்ன பிழை எப்ப வரும் என்று தெரியாது. ஆனால் உடனே முடிவெடுத்து செயற்படவேண்டும். (spontaneous decision making )

பொருட்களை சென்று பார்த்தேன். அவற்றின் எண்ணிக்கையையும், வடிவத்தையும் பார்க்க தலை சுற்றியது. இடப்பிரச்னை வேறு.

– ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலர்கள் –

 

– வடிவங்கள் பல –

– நிறைகளில் வித்தியாசம் –

– தரங்களில் மாற்றம் –

– ஒரே பொருள் பல வடிவங்கள் –

– ஒரு பொருள் பல கலவைமாற்றங்களில் –

பிரச்சனை எப்படி ஆனாலும் வேலையின் தரத்தில் விட்டுக்கொடு ப்பதில்லை என்று முடிவெடுத்தோம்.

எங்கயோ கேள்விப்பட்டது ஞாபகத்தில் வந்தது.

அது ‘Think Out of a box’

செயற்படுத்தினோம்.

பொருட்களுக்கு ஏற்றவாறு மாற்றகூடிய ஒரு Temporary Movable Studio Setup செய்தோம்.

அதை பொருட்கள் இருக்கும் இடத்திற்கு நகர்த்தினோம்.

Concept தலைகீழாக மாறியது.

படித்த Theory உடைந்து முழுவதுமாக வெளியேறியது.

பரீட்சித்து பார்க்கும் வரை இறுதி விளைவு விளங்காது.

சரி வந்தால் மகிழ்ச்சி

பிழைத்தால் வாங்கிய பொருட்களும், செலவழித்த நேரமும் waste ஆகும்.

ஆனால் அனுபவம் மட்டும் மிஞ்சும்.

– பிழைகள் –

– திருத்தங்கள் –

– யோசனைகள் –

– வாக்குவாதங்கள் –

– தோல்விகள் –

இறுதியில் வெற்றியுடன் திரும்பினோம்.

அனால் நாம் எதிர்பார்த்த 3 நாட்கள் வேலை 6 நாட்களாக நீண்டது.

வேலையின் தரத்தையும், நுணுக்கத்தையும், நாங்கள் படும் சிரமத்தையும் பார்த்து எம்மீது பாசமும், மரியாதையும் கூடியது அங்கு.

எம் சார்பாக எமக்கு ஒதுக்கப்பட்ட தளத்திற்கு எப்போதும், எத்தனை பேரும், எந்த நேரமும்
முன்னறிவிப்பின்றி வரலாம் என்று அன்போடு உத்தரவிட்டார் அந்த Super Market முதலாளி.

அவரின் அடுத்த செயற்திட்டத்திற்கும் நாம் கையோப்பமிட்டு விடைபெற்றோம்.

அது ஒரு Hotel Room Booking ஆன Advertisment Video சம்பந்தமானது.

என்னுடன் தோள் சேர்த்த அத்தனை இதயங்களுக்கும், அதரவு வழங்கிய அத்தனை உறவுகளுக்கும்

எனது மனமார்ந்த நன்றிகள்.

– எழுத்து –
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com

Total Page Visits: 174 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *