ஒரு வீடியோ விளம்பர செயற்திட்டத்திற்காக வடமராட்சி கிழக்கு நோக்கி பயணப்பட்டேன்;. குழுவினருடன்.

இருண்டு நாள் முழு நேர செயற்திட்டம் அது. எமக்காக இரண்டு வாகனங்கள் ஒதுக்கியிருந்தோம்.

ஒன்று கார், மற்றது வான்.

அனால் சரியாக ஒன்றரை நாட்களில் கச்சிதமாக செயற்திட்டத்தை முடித்தோம்;;.

எல்லொரும் களைத்துப்போய்யிருந்தோம்;.

கிட்டதட்ட 16 மணிநேரம் தொடர்சியான வேலை.

எமது வேலைப்பளு கமராவில் சூடாக வெளியேறிக்கொண்டிருந்தது. கொண்டு வந்திருந்த பற்றரி அத்னையும் கிட்டதட்ட செத்திருந்தது.

ஒன்று இருண்டு குற்றுயிருடன் கண்ணைமட்டும் சிமிட்டிக்கொண்டிருந்தது.

இருண்டு பேர் கொழும்பில் இருந்து என்னுடன் வந்திருந்தார்கள். அவர்களையும் சேர்த்து எல்லோரையும் எமது தொழில்சார் உபகரணங்களுடன்

(Camera, Tripod, Monopod, Mics, Labtops, Drone, Stadycam, Slider) அங்கிருந்து அனுப்பினேன் பாதுகாப்பாக Van இல்.

அப்ப மணி பின்னேரம் 4 இருக்கும்.

எம்முடன் நிறையநாள் உழைத்திருந்து Canon 6D Camera ஐ மட்டும் எடுத்து காரில் வைத்தேன்.

என்னுடன் ஒரு சகோதர மொழிக்காரர் வந்திருந்தார் வேலைக்காக , வயதில் மிக இளையவர் எமது தொழில் சம்பந்தமாக ஆர்வகோளாறு உடையவர். சுட்டு போட்டாலும் தமிழ் வராது.

வேலைக்களைப்பை போக்க அங்கு வேப்பமரத்திற்கு கீழ் இருந்த கப்பி கிணற்றில் வாளியால் அள்ளி கால் முகம் கழுவினோம்.

சற்று நகர்ந்துபோய் அங்கு றோட்டு ஓரமாக ஆலமரத்தின் கீழ் இருந்த டீ கடையில் இருவரும் பிளேன் டீ குடித்தோம்.

எங்கட களைப்புக்கும், அந்த கிணற்று குடிதண்ணிருக்கும் பிளேன் டீ கதகதப்பாக இருந்தது.

தொழில் ரீதியாக வேலை முடிச்சாச்சு.

பிடித்த ஒன்றை பதிவுசெய்யலாமே மனம் கேட்டது.

சரி. அப்ப, மணற்காட்டிற்கு போவம் என்று முடிவெடுத்துவிட்டு வாகனத்தை திருப்பினோம்
தொடர்ந்த 40 நிமிட எந்தவித தொந்தரவும் இல்லாத பயணம்

ஆனால் வாகனத்திற்கும் றோட்டுக்குதான் அடிக்கடி சண்டை.

மணற்காட்டை வந்தடைந்தோம்

அந்த மணற்காட்டுப்பிரதேசம் எங்களை சுத்தமான மணற்காற்றுடன் வரவேற்றது சந்தோசமாக.

அந்த பிரதேசத்தை முதன்முதல் கண்டதும் வந்த சகோதரமொழிகாரர் ஆசுவாசப்பட்டார், வெறித்துவெறித்து எல்லாபக்கமும் சுற்றி சுற்றிபார்த்தார் அதிசயமாக

அவரது ஆர்வகோளாறு இறங்கமுன்னம் காரை திறந்து கமராவை எடுத்து அவர் கையில் திணித்தேன். சந்தோசமாக நன்றியுடன் வாங்கிக்கொண்டார்.

‘என்னண்டாலும் எடு எங்கயேண்டாலும் இதுக்க போ (இடத்தை வரையறுத்தேன்) ஆனால் 20 நிமிடத்துக்குள் இதே இடத்துக்கு திரும்பிவந்துடு இதிலயே நான் நிற்பன்’ எண்டன் சிங்களத்தில்.

கமராவை மட்டும் கையில் கொடுத்தேன். அப்ப பற்றறி 15 சதவீதம் மட்டும் சார்ச் இருந்தது.

அவர் கமராவை கையில் எடுத்துக்;கொண்டு ஆர்வத்துடன் அங்கும் இங்கும் ஓடி மணற்காட்டின் மண் மலைக்குள் புகுந்து மரங்களுக்குள் மறைந்து போனார்.

நான் மணற்காட்டை பார்த்தபடி காரை விட்டு நகர்ந்து றோட்டுக்கு குறுக்காக நடந்து அங்கிருந்த மணற்திட்டியின் மீது காலை மடித்து அமர்ந்தேன்.

எந்ந வித வாகனசத்தமும் இல்லை. இயற்கை மட்டும் மௌனமாக சத்தம் போட்டது.

ஆள் நடமாட்டமே இல்லை. ஆள்காட்டி பறவை மட்டும் தலைக்குமேல் சுற்றி சுற்றி கத்தி வெகுதூரம் சென்று மறைந்தது.

ஒருவித மண்வாசனை மூக்கில் நனைந்து சுவாசபாதையில் கரைந்து பரவியது.

வீசும் காற்று நன்னீர் குளங்களை தொட்டு, சவுக்கம் மரங்களை தாலாட்டி, வெண் மணலை தடவி வந்து என்னை உரசிpசென்றது சத்தத்துடன்.

விதம் விதமான பறவைகளின் சத்தம் எல்லாப்பக்கங்களில் இருந்தும் பல்வெறு தூர இடைவெளிகளில்கேட்டு;க் கோண்டிருந்தது.

பரபரப்பாக உரசும் காற்றும் ஒருபுதுவித உணர்வை தந்தது.

கண்ணை மூடி ஆழமாக சுவாசித்து காற்றை அனுபவித்தேன்.

அது தொட்டு செல்லும் இளந்தென்றல் அல்ல,

கன்னத்தில் செல்லமாக தட்டிசெல்லும் குறும்புக்காற்று.

காற்றிடம் எம்மை வருட விரல் இல்லை அதனால்; மண் அள்ளிவந்து முகத்தில் தூவிவிட்டுசென்றது.

ஏனோ அந்தமணல் கண்ணை உறுத்தவில்லை. எளிதில் உதிர்ந்துபோகிறது.

கண்ணுக்கு எட்டும் தூரம்வரை மண்நிற மண் மலைகள்.

அதில் பட்டுதெறிக்கும் சூரியக்கதிர்கள் கண்களை கூச வைக்கிறது.

இடையிடையே ஒரேமாதிரியான மரங்கள் பல அளவுகளில்.

வித்தியாசமான அடர்த்தியில் முளைத்திருந்தன. அதனிடையே குடு குடு என ஓடி ஒளியும்; பறவைகள்.

சத்தத்துடன் தாளப்பறக்கும் குருவிகள்.

ஆள் உயரத்திற்குமரங்கள் அங்கு, அதை சிறு காடுகள் என்றும் சொல்லமுடியவில்லை

புதர் என்றும் நினைக்கமுடியவில்லை.

நாலாதிசையும் நீல கடல் போல் இங்கு வெண் மணல் பரந்துவிரிந்திருக்கிறது.

இறைவனை நம்புவர்கள் இங்கு வந்து பார்த்து இறைவனை நினைக்கலாம்.

இயற்கையை நம்புகிறவர்கள் இயற்கையை காணலாம்.

பகுத்தறிவாளர்கள் இங்கு மண்ணை கண்டு பரவசப்படலாம்.

என்ன அழகு,

எவ்வளவு நேர்த்தியான படைப்பு,

ஆழமான அமைதி.

என் கவனத்தை திருப்பினார் சகோதர மொழிக்காரார். கமராவுடன் கமரா சார்ச் முடிந்து செத்து போயிருந்தது.

அவரின் தலையில் இருந்து கால் வரை மண் ஒட்டியிருந்தது. கை முழுவதும் மண்ணாகவே இருந்தது. ஆனால் கமராவில் துளியும் இல்லை.

இருவரும் வந்து காரில் ஏறினோம், காரில் ஏறியவுடன் அவர் பாட்டு போட்டார்.

ஒரு குத்து பாட்டு ‘படார்’ என்று ஒலித்தது.

உடனேயே அதனை ‘ஓவ்’ பண்ண சொன்னேன்.

அமைதியாக வாகனம் நகர ஆரம்பித்தது. வீட்டை நோக்கி.

மனம் மட்டும் நகர மறுத்தது அங்கிருந்து…..உடனடியாக.

அவர் கமராவில் பதிவு செய்ததை பகிர்கிறேன் இங்கு.

(அவரின் பெயரை இங்குநான் குறிப்பிடவில்லை ஏன் என்றால் அவரிடம் நான் செத்துக்கொண்டிருந்த கமராவை மட்டும் கொடுத்ததால் அவரின் முழுதிறமையும் இங்கு இந்த பதிவில் வெளிப்படவில்லை. அவரின் விருப்பமும் அதுவே இருக்கிறது)

நன்றி.

– எழுத்து –
வி.நிஷாந்தன்.
www.vnishanthan.com

Total Page Visits: 80 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *