இந்தியா / திருச்சிராப்பள்ளி / மலைக்கோட்டை

நேரம் என்னை கூப்பிட்டது மதியம் 11 மணிக்கு தான். மலைக்கோட்டை உச்சி பிள்ளையாரை பார்க்க

மலை சரியான உயரமாம் 234 அடியாம், உச்சிக்கு போகவேண்டுமாம்.

படிக்கட்டுக்கள் 150 இருக்குதாம் சரிஞ்சு, சரிஞ்சு வேற இருக்குமாம்

ஏற ஒண்டரை மணித்தியாலம் ஆகுமாம்

களைக்குமாம், தலை சுத்துமாம், வெயில் ஏறினால் இன்னும் கஸ்டமாம்

அங்க மேல சாப்பாடு இருக்காதாம்.

மலைக்கோட்டையில் இருந்து பார்த்தால் திருச்சி மாநகரம் தெரியுமாம் Arial View இல

இறங்க முக்கால் மணித்தியாலம் ஆகுமாம்.

மதியம் ஏறினால் கால் பாதம் சுடுமாம். ஏறுவது கஸ்டமாம்

அங்கு போவதற்கும் ஒரு அனுகிரகம் வேண்டுமாம்.

சக்தி வாய்ந்த கோவிலாம்.

எல்லாத்தையும் செவிமடுத்தேன் எதிர்ப்பின்றி. ஆவலாக

கடைசியில் நான் கேட்டன்

‘என்னை மலை அடிவாரத்தில கொண்டு போய் விடுறியளே நான் ஏறி பாத்திட்டு இறங்கி Call எடுக்கிறன் அப்ப நீங்கள் வந்தால் போதும்’

அப்ப நேரம் 12.30 மதியம். என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். ஏதோ நினைத்தபடி.

என்னை பற்றி அவர்கள் நினைப்பது அது அவர்களுடைய பிரச்சனையே என்ர பிரச்சனை இல்லையே…. நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

வசதியாக வாகனத்தில் கொண்டுபோய் இறக்கி விட்டார்கள்.

வழமைபோல தேவைக்கு மட்டும் பணம் பையில், மறு கையில் கமரா Nikon D 3200, Lens 18-55 & a Shoulder bag. அதில் இரண்டு தோசைகள் சம்பலுடன், ஒரு லிற்றர் தண்ணி.

மலை அடிவார மாணிக்க பிள்ளையாரை வணங்கினேன்.

அங்கு சற்று அமர்ந்திருந்தேன்

ஏறத்தொடங்கினேன் ஒவ்வோரு படியாக ரசித்து மனத்தை அலையவிட்டபடி

படம் எடுக்க இந்திய பணமதிப்பில் 50 ரூபா அறவிடுகிறார்கள். ரசிதை பெற்றுக்கொண்டேன்.

அங்கு இருந்தவற்றை பார்த்தபடி என்னை கவர்ந்தவற்றை Photo எடுத்தபடி படிகளில் ஏறினேன்.

என்னை திரும்பி பார்க்கவைத்தவை

– கீழே இருக்கும் மாணிக்கபிள்ளையார் கோவில் கொழுத்தும் வெய்யிலில்
உள்ளே குளு குளு என்றிருந்தது.

– நடுவில் தாயுமானவர் கோவில்

– கீழிந்து மேல் செல்லும் பெரிய தொடர்ச்சியான பாறைப்படிகள்.

– இடை இடையே பாறை நடுவில் வெட்டபட்ட யன்னல்கள். வெளியில் பார்ப்பதற்கு.

– பத்து ரூபா நீர் அருந்தும் குவளைக்க பத்து மடங்கு கூடிய
இரும்பு விலங்கிடப்பட்டுருந்தது நகராது இருக்க.

– மலை வளைவுகளுக்கு ஏற்றவாறு வளையும் படிக்கட்டுகள் அதில்
நடக்க நாமும் வளைய வேண்டிஇருந்தது.

– உச்சியில் உச்சி பிள்ளையார் கோவிலில் சரசரக்கும் சாரல் காற்று மோதியது.

– உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து பார்க்கும் போது திருச்சி நகர் அழகாக இருந்தது.

அப்ப எனக்கு நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின் சொன்ன கருத்து ஞாபகத்துக்கு வந்தது அது

Life is a Tragedy when Seen in Closeup, But a Comedy in Longshot

– அங்கு மரநிழலில் இளைப்பாற சிறிய பூங்கா

– அன்னதானம் இந்திய சுவையில் மற்றும் பரிமாறல் இந்திய முறையில்

இறங்கி வந்தேன் எனக்கு எந்த வித உடல் அலுப்பும் இல்லை. மன
ஓட்டம் இதமாக இருந்தது.

எடுத்த படங்களை உங்களுடன் பகிர்கிறேன், பிடித்திருந்தால் பார்த்து மகிழுங்கள்.

(Note – Iam not a professional photographer but I like photography very much)

https://www.youtube.com/watch?v=ip5fdseIGQQ&feature=youtu.be

– எழுத்து –
வி.நிஷாந்தன்
vnishanthan.com

Total Page Visits: 81 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *