அது 1998ம் ஆண்டின் நடுப்பகுதி.

யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றி இருந்த காலம், ‘இராணுவத்தின் சிவில் ஆட்சி’ ??? !!! … நடந்து கொண்டிருந்த காலப்பகுதி.

வன்னியில் இருந்து தங்களின் வேலைகள், வசதிகள் கருதி மக்கள் யாழ்ப்பாணம் நோக்கி வந்து போய்கொண்டு இருந்தார்கள்.

வன்னியில் இருந்து நானும் அப்பாவுடன் கப்பல் மூலம் வந்து ஹாட்லிக்கல்லூரியில் மீண்டும் இணைந்தேன்
A/L படிப்பதற்காக.

வன்னியில் வாழ்ந்தது என் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத இனிய அத்தியாயம்

போர்ச்சூழலில் என்னதான் பிரச்சனை இருந்தாலும் வன்னி சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அங்கு வன்னியில்….

குருவிகள் கூப்பிடும் காலை நேரம்

பின்கதவு பாதி திறந்த தட்டி Van அல்லது Lorry இல் வன்னியின் சிவத்த கிறவல் றோட்டில் பயணம்

செந்நிற புழுதியில் குளித்துவிடுவம். கறுப்பு தலை அப்படியே பழுத்து சிவப்புக்கு மாறும் வரை.

புழுதியை தட்டினால் அது கொடுக்கும் Effect விஐயகாந்த் படத்தில் Climax Scene இல் அவர் வில்லனை போட்டுவாங்கும் Effect க்கு தோற்றுபோகும் Backround Light இல். அப்படி இருக்கும் புழுதியின் அடர்த்தியும் அளவும்.

அனால் அப்ப தடிமனோ காய்ச்சலோ வந்தது இல்லை அந்த செம்மண் புழுதியால்.

காட்டு மரங்களின் இடையில் இருக்கும் கிரவல் றோட்டில் மண்ணெண்ணெய் மோட்டர்சயிக்கிளில் நீண்டநேர பயணங்கள்

இடைஇடையே போகிற வழியில் இருவருக்கும் ஓய்வு,

ஓட்டுகிற எங்களுக்கும் மற்றும் ஓடும் வாகனத்திற்கும்.

மோட்டர்சயிக்கிள் மரநிழலில் நிற்கும்; Sight Stand இல் அமைதியாக
நாங்கள் உறங்கி எழுவம் அதே குளுகுளு மரநிழலில் நிம்மதியாக

களவு பற்றிய பயம் கனவிலும் வராது. நிர்வாகம் அப்படி.

வன்னி எல்லைக்குள் கடலிலும், தரையிலும் எம்மை சுற்றி உயர் பாதுகாப்பு உணர்வு

அண்ணனின் ஆட்சியில் தேவைகள் தேவைக்கேற்றபடி இருந்தது.

எல்லோரிடமும் தேவைக்கு பணம் இருந்தது எந்தவித பந்தாவும் இல்லாமல்.

பிச்சைக்கு கையேந்தும் மனிதர்கள் பிச்சைக்கும் இல்லை

மாலையில் தொழுவம் திரும்பும் காளை மற்றும் பசு மாடுகளின் அணிவகுப்பு மனசை கொள்ளை கொள்ளும்.

அவைகளின் கிளுகிளுப்பான விளையாட்டுகளையும், அந்த வயசு மனசு ரசிக்கும்.

நடுநீசியில் கூட இளம்பெண் நடமாடலாம் பயமின்றி.

தண்டனைகளும், தீர்ப்புகளும் குற்றத்திற்கு தீர்வாக மட்டுமல்ல மற்றவர்கள் அந்த குற்றத்தை மீண்டும் செய்ய கனவிலும் நினைக்காததாக திகிலுடன் மனதில் பதிவதாக இருந்தது.

இங்கு யாழ்ப்பாணத்தில்….

காணும் இடமெல்லாம் இராணுவம்,

மீசை, தாடி இல்லாத முழுமையாக Clean Shave

அதுவரை கண்ணுக்கு பழக்கமில்லாத புதிய அந்நிய முகங்கள்.

காதுகள் அதுவரை கேளாத புரியாத மொழி.

உரு மறைப்புகளுடன் கூடிய இரும்புச்சட்டித்தொப்பி, கரும்பச்சை நிற இராணுவ சீருடை.

கணுக்காலையும் மூடி உயர்ந்த இலேசால் வரிசையாக இறுக்கப்பட்ட கறுத்த தோல் இராணுவ சப்பாத்து. (Para Military Shoe)

கையில் தானியங்கி துப்பாக்கி (Auto enable Rifle)

நெஞ்சுப்பகுதியை மூடிய கோல்ஸ்சர் (holster) உறைகள், அதனுள் துப்பாக்கிக்கான ரவைகள் கொண்ட மேலதிக Magazine கள் மூன்று.

இடுப்பில் கரும்பச்சை நிற குண்டான தண்ணீர் கான்.

ஒருவர் தலைமை தாங்கும் மூன்று பேர் கொண்ட சிறு குழுக்கள், தெருவின் ஒரத்தில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் துப்பாக்கியுடன் நிற்பார்கள்.

அதில் சிலர் தெருவோரமாக இருக்கும் வெறும்காணிகள் அல்லது ஆட்கள் இல்லாத விடுகளின் மதில் சுவருக்கு பின்புறமா தமது உயரத்திற்கு ஏற்றவாறு நிலத்தில் உயரங்களை வைத்து அதன்மேல் நின்றுகொண்டு தலைமட்டும் வெளியில் தெரியும்படி தெரு நடமாற்றங்களை உன்னிப்பாக அவதானித்தபடி இருப்பார்கள் சட்டி தொப்பியுடன்.

நாங்கள் வெகுவிரைவில் இனங்கண்டு கொள்ளாதபடி.

அடிக்கடி கால் நடையாக வரிசையாக ரோந்து போவார்கள் வரிசையாக தெருவின் இருண்டு பக்கங்களையும் எப்போதும் சந்தேகத்தோடு வெறித்துப்பார்த்தபடி.

எப்போதும் அவர்களின் கையில் தயார்நிலையில் (fully automatic firing mode) இருக்கும் துப்பாக்கிகள் தேவைப்பட்டால் தாக்குதலை உடனடியாக நடத்துவதற்காக.

மற்றது

தெருக்களில் செல்லும் இராணுவ உயரதிகாரிகளின் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிவேக மோட்டர்சயிக்கிள் ரோந்துப்பிரிவு

அதை நாங்கள் field bike group என்று சொல்வோம்.

அது yamaha மோட்டார் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பான field bike ஆக இருந்தது.

அதன் எஞ்சினின் சத்தத்தினை அதிகப்படுத்த Silencer இல் இருக்கும் Muffler ஐ கழட்டிஇருப்பார்கள்.

அதன்போது வரும் சத்தம் சகிக்க முடியாமல் இருக்கும் நிச்சயம் ரசிக்ககூடியதாக இருக்காது யாருக்கும்.

ஆனால் நீண்ட தூரத்திற்கு சத்தம் கேட்கும் மிரட்டலாக.

மோட்டர்சயிக்கிள் முழுதாக இராணுவ கரும்பச்சை நிறத்திற்கு மாறியிருக்கும்.

அதன் வேகம் கூடி இஞ்சினின் இயக்கம் அதிகரிக்கும் போது அதன் சத்தமும் இன்னமும் கூடும்.

பெரிய விட்டம் உள்ள சில்லுகள் உடைய உயரமான, பயமுறுத்தும் தோற்றம், Tyre க்கும் Mudguard க்குமான இடைவெளி மிக கூடுதலாக இருக்கும்.

அதனால்

கருடுமுரடான, பள்ளம் மேடுகள் உள்ள பிரதேசங்களில் மட்டுமல்ல கடுமையான மணல் பாங்கான இடங்களில் கூட மிக லாவகமாக எந்தவித தடையும் இல்லாமல் ஓட்டி செல்லக்கூடிய அமைப்பு.

இந்த மோட்டார் சயிக்கிள்கள் மூன்றில், ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றை ஒன்று துரத்தியவாறு சம தூர இடைவெளியில் அதி வேகமாக சீறி பாய்ந்து செல்வார்கள்.

தெருவில் இருக்கும் போக்குவரத்தை விலக்கியபடி

அவற்றை தொடர்ந்து

ஒரு Defender jeep அதில் அந்த ரோந்து பாதுகாப்பை மேற்பார்வை செய்யும் இராணுவ அதிகாரி

அதன் பின்

மிக வேகமாக குண்டு துளைக்காத கவச வாகனம் (Armoured Vehicle) அதில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு உயரதிகாரி அல்லது வேறு உயரதிகாரியோ பயணம் செய்வார்.

அவருக்காகவே அந்த ரோந்து.

அதன்பின்

அதேமாதிரி அதே வேகத்துடன் மூன்று Yamaha Field Bike சென்று அந்த ரோந்து முடிவுக்கு வரும்.

ரோந்து முடிவடையும் வரை எந்த பொதுமக்களின் வாகனங்களும் பயணிக்க முடியாது. தெருவின் ஓரத்தில் ஒதுங்கி காத்து நிற்கவேண்டும்

அப்போது சயிக்கிள்தான் எல்லோருடைய தேசிய வாகனமாக இருந்தது.

அந்த பயங்கரமான காதை கிழிக்கும் ரோந்து மோட்டர் சயிக்கிள்களின் சத்தத்ங்களினாலும்.

காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக பயணிக்கும் ரோந்து வாகனங்கள் கடந்து செல்லும் போது

அங்கு உருவாகும் காற்றழத்தம் சயிக்கிளில் பயணம் செய்பவர்களை
நிலைகுலைய வைக்கும் அத்துடன் ஒரு வித பய உணர்வையும் ஏற்படுத்தும்

அதன் காரணமாக

சயிக்கிளில் பயணம் செய்யும் வயது வந்தவர்கள், பெண்கள் எல்லோரும் ஓதுங்கி விடுவார்கள். அல்லது சத்தத்தாலும், பயத்தாலும் ஒதுக்கப்படுவார்கள்.

அனால் நாங்கள் நால்வர்

தொடர்ந்து பயணம் செய்வோம்.

பிரதீபன், ரவிசங்கர், எட்வின், அவர்களுடன் நான்.

எல்லோருக்கும் வயது கிட்டதட்ட பதினெட்டு

A/L Tution Class க்காக வதிரி நோக்கி பயணிப்போம் பருத்தித்துறையில் இருந்து.

Field Bike ரோந்து மிக வேகமா போனாலும்,

அந்த காற்றழுத்தம் அசைத்தாலும், அடித்தாலும்

அவர்களை தெருவின் நடுவில் தாராளமாக செல்லவிட்டுட்டு

நாங்கள் தெருவின் ஒரத்தில் சயிக்கிள் காண்டிலை (cycle Handle இறுகபிடித்தபடி பயணம் தொடரும். நிறுத்தாமலே

வயது அப்படி.

வயதுக்கேற்ற முறுக்கேறிய தேகம். ரெக்க கட்டிய மனது.

அந்த வயதுக்குரிய கோர்மோனின் (Hormones) ஆட்சியிலும், ஆதிக்கத்திலும் எங்கள் சிந்தனைகளும் எண்ணங்களும் இருந்த பதின்மவயது காலப்பகுதி.

வாகனங்களின் றோட்டுடன் உரசும் ரயர்களின் சத்தம் ஒரு வித பீதியை ஏற்படுத்தும்.

அதன்போது வரும் காற்று எம்மை ஒரு அழுத்தத்துடன் உரசும்.

அதன்போது A/L Physics பாட விதானத்தில் இருக்கும்

சார்புவேக தத்துவமும், காற்றழுத்த விதிகளும்,

வகுப்பில Theroy படிக்காமல் Lab இல Practical செய்யாமல்

தெளிவாக ‘பட்டென’ என புரியும்.

அப்படி இருக்கும் ரோந்து வாகனங்களின் மரண வேகம்.
அந்த காலப்பகுதியில் ஒரு இராணுவ நீல நிற Leyland Lorry ஒன்று இருந்தது.

பாவித்து பழுதாகிய தோற்றம், பல இடங்களில் அடிபட்டு நெரிந்தும் உடைந்தும் தொங்கிகொண்டிருந்தது.

அதை ‘யமன்’ என்போம்.

அது பலரை வேகமாக சென்று வேககட்டுப்பாட்டை இழந்து பலரை மோதி கொன்றதாக சொல்வார்கள்.

அது வேகமாக வரும்போத எல்லோரும் ஒதுங்கி நிற்பார்கள்.

அதன் சாரதிக்கு முன் இருக்கும் பெரிய உயர்ந்த கண்ணாடி முற்றுமுழுதாக உடைந்து இருக்கும. கண்ணாடி இருந்த அடையாளமே அதில் இருக்காது.

அதனால் அதன் முன் சீட்டில் இருப்போர் தங்களுக்கு கறுத்த மூக்கு கண்ணாடி அணிந்து இருப்பார்கள்.

அப்ப பிரதீபன் அடிக்கடி சொல்லுவான் அதை பார்த்துவிட்டு

‘எங்கையோ மோதி Lorry இன் கண்ணாடியை உடைச்கிட்டு தங்களுக்கு கண்ணாடி போட்டு ஓடுறாங்களாடா கவனம் பொடியள்’ என்பான் அக்கறையா…

சரி அடுத்தது…..

பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிக்கு செல்லும் பிரதான வீதி.
அது சாதாரண விசாலம் கொண்ட இருவழி பாதை (Two way Road)

வெள்ளை நிறகோட்டால் மட்டும் பிரிக்கப்பட்டிருக்கும்.

போகும் பாதையில் வருகிறது மாலி சந்தி எனும் இடம்

அங்கு

பிரதான றோட்டின் இரு வழிகளையும் கிட்டதட்ட இருநூறு மீற்றர் இடைவெளியில்
மண்ணெண்ணைய் பரலுக்குள் மண்நிரப்பி றோட்டின் நடுவில் வைத்து

இரும்பு கம்பிளாலும் மொத்தமான தகரத்தினாலும் வலுவான தடுப்பினால் பிரிக்கப்பட்டிருக்கும்.

சரியாக றோட்டின் நடுவில் இருந்து தெருவோரம்வரை தடுப்பு நீண்டு இருக்கும்

மக்களோ, வாகனமோ இராணுவத்தின் அனுமதியின்றி தாண்டி செல்லாமல் இருக்க அது வலுவாக இருக்கும்

இந்த தடுப்பில் இருந்து கிட்டதட்ட இருபது அடி தள்ளி

தெருவின் இருபக்கமும் அமைந்திருக்கும் இராணுவத்தின் மக்களை பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதிப்பு செய்யும் இடங்கள். (Military check point)

அந்த வழியாக பயணம் செய்யும் மக்களையும் வாகனங்களையும் பரிசோதிப்பதற்கு

இரண்டு Military check point களும் றோட்டின் இருண்டு பக்கமும் வீதியோரமாக அமைந்திருக்கும்.

அது நாலு பக்கமும் வெட்டப்பட்ட பனம் குற்றியினை ஆறு அடி உயரம் வரை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி அதற்கு மேல் இரண்டடி அடிக்கு பச்சைநிற 50k.g உரப்பையில் மண் நிரப்பப்பட்ட மண்மூட்டைகள் அடுக்கபட்டிருக்கும்

உள்ளே இருக்கும் இராணுவத்தினர் வெளியில் பார்பதற்காக இரண்டு அடி இடைவெளி விட்டு அடுக்கி அதற்கு மேல் பச்சைநிற இராணுவ தகரத்தை வைத்து அதற்கு மேலாக மண் மூட்டைகளும்; கொங்கிறீட் கல்லுகளாலும் அடுக்கி மூடியிருப்பார்கள்.

அதன் வாசற்பகுதி வாகனங்கள் செல்லும் தெருவின் பக்கத்தை நோக்கியதாக இருக்கும்

அந்த இடைவெளியில் இராணுவம் நிற்கும் மக்களை பரிசோதிப்பதற்காக.

Check Point க்கு முன் உள்ள தடுப்பில் வாகனங்கள் நிறுத்தப்படும்

வாகனத்தால் இறங்கும் ஒவ்வொருவரும் அந்த இருண்டு பக்கமும் முள் வேலியால் அமைந்த சிறு பாதையால் இராணுவத்தை நெருங்கி வந்து

முதலில் இரு கைகளையும் தூக்கவேண்டும் உடற்பரிசோதனை செய்வதற்காக
நெஞ்சில் இருந்து முழங்கால் வரை தடவுவார்கள் உடற்பரிசோதனைக்காக.

அதன் பின்

இராணுவத்தால் வழங்கிய அடையாள அட்டையையும் மற்றும் தேசிய அடையாள அட்டையையும் தங்களை உறுதிப்படுத்த இராணுவத்திடம் காட்டவேண்டும்.

சயிக்கிளில் மற்றும் மோட்டர்சயிக்ளில் செல்பவர்கள் சயிக்களை விட்டு இறங்கி அந்த அதனை அந்த சிறிய பாதையூடாக உருட்டி சென்று தங்களை கைகளை தூக்கி உறுதிப்படுத்திக்கொண்டே பயணத்தை தொடர்வார்கள்.

சயிக்கிளில் செல்பவர்கள் சயிக்கிளை தங்கள் இடுப்பில் சாத்தியபடி கைகளை தூக்கவேண்டும்.

மோட்டர்சயிக்கிளில் செல்பவர்கள் பக்கத்தில் ‘park’ பண்ணிவிட்டு. வந்து கையை தூக்குவார்கள் Body Check பண்ண.

அதன்போது

மற்றைய இராணுவத்தினர் வாகனத்தை பரிசோதிப்பர் அதன்பின் பயணம் தொடரும் சந்தேகத்திடமானோர் தடுத்து நிறுத்தப்படுவர்.

அடுக்கப்பட்ட அந்த இடைவெளி;யூடாக துப்பாக்கி முனை நீண்ட வண்ணம் இருக்கும்.

அதன்வழி தெருவொரு நடமாட்டங்களை இராணுவம் அவதானித்தபடி இருக்கும்

அவசரத்திற்கு எல்லா பக்கமும் திருப்பி தாக்குதல் நடத்துவற்காக ஏதுவாக அது பொருத்தப்பட்டிருக்கும்.

நாங்கள் நால்வரும் சயிக்கிளில் வருவம் பருத்தித்துறையில் இருந்து மாலி சந்தியில் Group ஆக checking க்கு வந்து இறங்குவம், அடையாள அட்டைகளை காட்டுவம், சயிக்கிளில் ரெக்க கட்டி பறப்போம்.

பருத்தித்துறையில் இருந்து எங்கட வகுப்புக்கு வரும் சயிக்கிள் பெண் பைங்கிளிகளுக்கும் முற்று முழுதான பாதுகாப்பு நாங்கள் வழங்குவம் வீதியில்

அப்ப Signal காட்ட,

உணர்வுகளை வெளிப்படுத்த,

S.M.S அனுப்ப,

மொபைல் இல்லை,

அதனால் whatsup ம் இல்லை, Viber ம் இல்லை.

எல்லாம் Manual Method தான்.

உச்சகட்ட Highly Effect சிக்னலாக

cycle bell ஐ அவர்களை தாண்டி வேகமாக முந்திச்செல்லும்போது பலமாக மிக விரைவாக அடிப்பது.

அவர்கள் சிரிக்கும்போது அதை ரசிப்பது

அதிக பட்ச வன்முறையின் வெளிப்பாடாக இருந்தது

றோட்டில் சைக்கிளில் செல்லும்போது பைங்கிளிகளின் பெயர் சொல்லி கூப்பிடுவது.

காதல் அப்போது காதலாக இருந்தது

வன்முறை எண்ணங்கள் மனதில் கூட இருந்தது இல்லை.

சயிக்கிளில் சமாந்தரமாக பக்கத்து சயிக்கிளின் Handle ஐ பிடித்தபடி நட்புகளுடன் பயணம்

வாழ்க்கையின் என்றும் மறக்கமுடியாத தருணங்களும் பசுமையான பயணங்களும் அவை

7 k.m தூரத்தை cycle இல் வேகமாக சும்மா 15 நிமிடத்தில் கடந்து இருந்தோம்.

ஆசிரியர்களை கடவுளாக மதித்தோம்.

ஆசிரியர்களை தெருவில் கண்டால் தலை தெறிக்க ஓடி மறைந்தோம்

ஆசிரியர்களும் மாணவர்களின் கல்விக்காகவே வாழ்ந்தார்கள்.

காலையில் இருந்து மதியம் வரை பாடசாலையில் படிப்பிலும் அதன்பின் நட்பின் அரட்டையிலும்

மாலையில் Tution class இல் படிப்பு,

Tution முடிந்தவுடன்

நண்பர்களுடன் தெருவோர பயணம் சயிக்கிளில்

அடுத்தது ஹாட்லிக்கல்லூரி

அது எங்கள் பாடசாலை.

பருத்தித்துறையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் College Road இல் அமைந்திருந்தது.

எங்கள் பாடசாலைக்கு எதிர்புறமாக 500 மீட்டர் கடற்கரைப்பக்கம் தள்ளி இருந்தது
Methodist Girls College.

எங்கள் பாடசாலைக்கு கிட்டதட்ட ஐந்நூறு மீற்றருக்கு முன் இரண்டு Military Check Point கள் தனிதனியாக எங்களுக்கும் மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கும்.

சைக்கிளால் இறங்கி செல்வோம்

எங்களை ஒரு சிறு மறைவில் Body Checkup செய்வார்கள்.

சற்று தூரத்தில்

பெண்பிள்ளைகளை பெண் இராணுவத்தினர் மூடிய ஒரு Military Check Point இல் Body Checkup செய்வார்கள்.

அதனை முடித்துக்கொண்டு பாடசாலை செல்வோம் மீண்டும் சயிக்கிளில் ஏறி.

இரண்டுக்கும் பொதுவான றோட்டின் நடுவில் முள்ளுக்கம்பி வேலி இடப்பட்டு இருக்கும் இராணுவத்தால் சிறு சிறு இடைவெளி விட்டு

அதனால்

திடீரென றோட்டின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் போகமுடியாது

ஒரே நேரம்தான் இரு பாடசாலைகளும் முடிவடையும் மதியம் 2 மணிக்கு.

நாம் எமது வயதுக்குரிய பெண் சிட்டுகளை வெள்ளை நிற பாடசாலை சீருடையில் காண்பது ஒரு திறிலான (Thrill) அனுபவம்

அதற்காக கடைசி பாடவேளையில் தலைமுடி எல்லாம் சரியாக இழுத்துக்கொள்வோம்
Jeans & Shirt எல்லாம் சரியாக In பண்ணிகொள்வோம்.

நான் படித்தது விஞ்ஞானம் எமது வகுப்பில் நாங்கள் பதின்மூன்று பேர் மட்டுமே எங்களுக்குள் ஒரு நல்ல ஒற்றுமை எப்பவும் இருக்கும்.

எமது Block இல் எமக்கு அடுத்ததாகவும் கடைசியாகவும் எமக்கு பின்னால் இருந்த வகுப்பு கலைப்பிரிவு.

எல்லோரும் நாம் ஒன்றாக O/L வரை ஒன்றாக கற்றவர்கள்.

பின் A/L இல் ஒவ்வொரு பிரிவாக பிரிந்தோம். அனால் நாம் எல்லோரும் நண்பர்கள்.

Interveral இல் ஒன்றாக உணவு அருந்தினோம்,

Free பாடவேளையில் நட்பை பகிர்ந்தோம்.

அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் A/L இலும் தடியால் சரியான விடைசொல்லாவிட்டால் கையை நீட்ட சொல்லிவிட்டு மிக பலமாக அடித்து துவம்சம் செய்வார்.

அவர் அந்த வகுப்பின் வகுப்பாசிரியரும் கூட.

எமது நண்பர்களுக்கு அடிக்கும் சத்தம் அவர்களின் சுவர் தாண்டியும் தெளிவாக எங்களுக்கு கேட்கும்.

ஆசிரியர் என்றாலும், அந்த வயதில் அடிப்பது என்பதை அந்த வயசு மனம் ஏற்றுகொள்வதாக இருந்ததில்லை.

எமது நண்பர்களை எங்களுக்கு தெரிந்தே அடிவாங்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வரும்.

நரம்பெல்லாம் முறுக்குகேறும். கோபத்துடனும் கவலையுடனும் பொறுத்துக்கொண்டு இருப்போம். மனசு சும்மா விம்பி வெடிக்கும்.

அந்த ஆசிரியர் நல்ல கறுப்பு, மீசையை முழுதாக வழித்திருப்பார். நெற்றி முழுவதும் திருநீறு பூசி, சந்தணமும், குங்குமமும் சாத்தியிருப்பார்.

அவரை நாம் முறைத்துப்பார்ப்போம். ஆனால்,

அவர் சிரித்துவிட்டுச்செல்வார். ஏனென்றால் நாம் முறைப்பது அவருக்கு புரியாது, ஏன் என்றும் அவருக்கு தெரியாது. அது எங்களுக்கும் விளங்காத வயசு.

(சமுக பொதுவெளியில் இது ஒரு நினைவு பதிவு என்பதால்; பெயரையும் அவர் கற்பித்த பாடத்தையும் இங்கு குறிப்பிடவில்லை ஆனால் சமகாலப்பகுதியில் வாழ்ந்த, படித்த எல்லோருக்கும் இதை வாசிக்கும் போது நிச்சயம் நினைவு அவரை கொள்வார்கள்)

கட்டையான உருவம், நல்ல பெரிய வயிறு தள்ளிக்கொண்டு நிற்கும். அதற்கு மேலாக Belt கட்டி இருப்பார் Tight ஆக.

அவர் ஒரு Honda Super cup bike ஒன்று வைத்திருந்தார் அது சரியான பழசு.
அத்தோடு அதன் பல பாகங்கள் அதில் இல்லை. Signal light நான்கும் உடைந்திருந்தது. Break light இருந்த இடம் மட்டும் இருந்தது.

Head light இல் கண்ணாடி இல்லை. முன் Mud Guard உடைந்திருந்தது. அவர் அமர்ந்து பயணம் செய்யும் Seat கூட கிழிந்து பக்கவாட்டில் இருக்கும் ஆணிகள் சாதுவாக வெளித்தெரியும். பின்பக்க Seat இல்லை.

அவரின் மோட்டர்சயிக்கிளில் ஏறி ஓடவேண்;டும் என்றால் அதுக்கு முன் மரமஞ்சள் (Sitha Anti biotic medicine) அவித்து குடிக்கவேண்டும் அவ்வளவு பழையது. சரியாக அமராவிட்டால் தகரங்கள் உடம்பில் கிளிக்கவும் வாய்ப்பு உண்டு.

அந்த மோட்டர்சயிக்கிள் Start பண்ணியவுடன் அது போடும் சத்தம் water pumb, Start பண்ணின மாதிரி இருக்கும்.

Bike இன் Silencer ஆல் மட்டும் புகை வராது. மோட்டர்சயிக்கிளே புகைக்கும்.

மோட்டர் சயிக்கிளுடன் சேர்ந்து Sir உம் புகைக்குள் சிறிது நேரம் மறைந்து பின் தோன்றுவார். அதன்பின் பயணத்தை தொடங்குவார்.

அன்றும் வழமைபோல் பாடசாலை முடிவடைந்த பின் நான் எனது வகுப்றையின் பின் இருக்கும் எனது சயிக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்ப எமது பள்ளிக்கூட பிரதான வாசல் வழியாக வரும்போது அந்த Arts sir ஐ பார்க்கிறேன்.

Sir இன் மோட்டர் சயிக்கிள் Head light எரிந்து கொண்டு இருக்கிறது பட்ட பகலில் அதுவும் நடு மதியம் 2.20.

Sir ம் கியரை போட்டுவிட்டார் மெதுவாக மோட்டார் சயிக்கிள் நகர ஆரம்பிக்கிறது.

றோட்டின் மற்றைய பக்கம் மெதடிஸ்ட் பாடசாலையின் பிரதான வாசலில் இருந்து பெண்பிள்ளைகள் வெள்ளை நிற பாடசாலை சீருடையுடன் வர ஆரம்பிக்கின்றனர்.

எனக்கோ, ஒரு பெண்பிள்ளை சேரின் Head light பகலில் எரிவதை பார்த்தால் அது எங்களுக்கே பெரிய அவமானமாக போய்விடும் என்ற எண்ணம்

அது அந்த வயது செய்யும் மாயம்.

அதுவும் அந்த பெண்பிள்ளைகள் யாராவது சொல்லி,
Sir, Head light ஐ Off பண்ணி விட்டால் அது பள்ளிக்கூடத்திற்கே அவமானமாக போய்விடும் என்று வயசு உணர்ச்சி.

அது அந்த வயதுக்குரிய Hormone இன் ஆதிக்கத்தின் விளைவு.

நான் நடந்து கொண்டே எமது பள்ளியின் பிரதான வாசலில் நிற்கும் மாணவர் தலைவனான (Prefect) க்கு கையால் சைகை காட்டுகிறேன். கத்தி சொல்லமுடியாது.

கேட்டு விடுமே, அங்கால…அதுதான் எங்களுக்கு பெரிய அவமானமே???? !!!!

சைகை காட்டுகிறேன்…… அவர் Sir க்கு பின்னால் நிற்பதால் அவருக்கு நான் சொல்வது விளங்கவில்லை.

சரி நான்தான் இப்ப Action இப்ப இறங்கவேண்டும்.

சடாரென என் சயிக்கிளை பக்கத்து சுவரில் சாத்துகிறேன், Site Stand ஐ தட்டி நிற்பாட்ட கூட நேர அவகாசம் இல்லை எனக்கு.

வேகமாக ஓடிப்போகிறேன் எதிர்பட்ட மாணவர்களை பலவந்தமாக தள்ளியபடியும், இடித்துக்கொண்டும்.

இப்பொது பெண்பிள்ளைகள் கூடுதலாகவரதொடங்கிவிட்டார்கள். எனது வேகம் இன்னமும் கூடுகிறது. மாணவர்களை விலக்குவதற்காக பாதையை விட்டு விலகி ஓடுகிறேன். செடியின் முள்கள் என் காலை School Jeans தாண்டியும் கீறுகின்றன. வேகம் அப்படி.

பிரதான வாசலை கிட்டதட்ட நெருங்கிவிட்டேன். நிமிர்ந்து பார்க்கிறேன். Sir இன் மோட்டர் சயிக்கிள் வேகமெடுக்க ஆரம்பிக்குது.

எமது பிரதான வாசலின் எதிர்புறமாக செல்கிறார் தெருவின் நடுவிலில் இராணுவத்தின் ஒன்றரை அடி உயரத்துக்கு இரும்பு முள்ளுக்கம்பி வேலி சற்று தள்ளி இடைவெளி உள்ளது அந்த இடைவெளியூடாக திரும்பி வர நேர அவகாசம் இல்லை

வேலிக்கு மேலால் ஒரு துரஅடி காலடியின் கீழ் ‘சரார்’ என்று ஒரு சத்தம்

என் கணுக்காலுக்கு கீழ் Jeans இல் முள்ளுக்கம்பி பட்டு கிளித்துவிட்டது.

அது மட்டும் உணர்கிறேன். காலை குனிந்து பார்க்க நேரம் இல்லை.

தேருவோரமாக தெருவுக்கு கீழ் இறங்கி Sir ஐ தாண்டி ஓடுகிறேன்.

நான் பரபரப்பாக ஓடுவதை அவதானித்த sir என்னை தலையை மட்டும் திரும்பிப்பார்க்கிறார் மோட்டார் சயிக்களை செலுத்தியபடி.

நான் மெதுவாக சேருக்கு கிட்ட சமாந்தரமாக ஓடிக்கொண்டே….

‘Sir, Bike இன் Head light எரிந்து கொண்டு இருக்கு Off பண்ணுங்கோ’

அதுக்கு சேர் என்னை பார்த்தபடி நிதானமாக

‘ஓம் தம்பி,…. தெரியும் எனக்கு, Head light ஐ Off பண்ணினால் தொடர்ந்து Horn அடிச்சு சத்தம்போடும் வீடு போகும்வரை அதுதான் இது பரவாயில்லை’

Motorbike ஐ ஓடியபடியே சொன்னார் எனக்கு

நான் ஓடும் வேகத்தை குறைக்கிறேன். காலில் ஏதோ ஓரு உணர்வு குனிந்து பார்க்கிறேன்.

கணுக்காலில் இருந்து மூன்று இஞ்சி உயரத்தில் இரத்தம் கசிகிறது. School Jeansயும் ஐ தாண்டி நனைந்திருக்கிறது.

– எழுத்து –
வி.நிஷாந்தன்
vnishanthan.com

Total Page Visits: 1046 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *